திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆர்டிஓ மற்றும் தாசில்தார்கள் பயன்படுத்திய முதிர்ந்த நிலையில் உள்ள ஜீப்புகள் ஏலம் விடப்பட உள்ளதாக கலெக்டர் வந்தனா கார்க் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது,
திருவண்ணாமலை மாவட்டம், மாவட்ட வருவாய் அலகில் 1. வருவாய் கோட்ட அலுவலர், திருவண்ணாமலை 2. வட்டாட்சியர், திருவண்ணாமலை 3. வட்டாட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்), போளூர் 4. வட்டாட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்), ஆரணி ஆகியோர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட சீருந்துகளை முதிர்ந்த நிலையில் (Normal Condemnation) கழிவு செய்யும் பொருட்டு பொது ஏலம் விட மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் குழு நியமனம் செய்யப்பட்டுள்ள நிலையில் எதிர் வரும் 27.10.2026-ம் தேதி அன்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்திலுள்ள Old GDP Hall-ல் பொது ஏலம் விட முடிவு செய்யப்பட்டுள்ளது.
அன்று காலை 11 மணிக்கு மாவட்ட ஆட்சித்தலைவரால் நியமிக்கப்பட்ட குழுவினர் தலைமையில் ஏலம் நடத்தப்படும்.
பொது ஏலத்தில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் தங்களின் ஆதார் அட்டை, பான் கார்டு, புகைப்படம் -2 மற்றும் பதிவு கட்டணம் ரூ.100/- கொண்டுவருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. பதிவு கட்டணம் திருப்பி அளிக்கப்படமாட்டாது. வாகனங்கள் ஏலம் எடுத்தவர்கள் ஏலம் முடிந்தவுடன் ஏலத்தொகை முழுவதையும் ரொக்கமாக செலுத்திட வேண்டும். ஏல தொகையில் GST18% விற்பனை வரியாக செலுத்தப்பட வேண்டும்.
வாகனங்களின் விவரங்கள் வருமாறு.
1.வாகன எண் மற்றும் அதன் வகை: TN 25 G 0531 Mahindra & Mahindra & Bolero DI/CRDE, டீசல் / 2011, 302760 கிலோ மீட்டர் ஓடியது, Engine No/ Chassis No: GPB4J96020/MA1WE2GPKB2J94311, நிர்ணயம் செய்யப்பட்ட குறைந்தபட்ச விலை ரூ.75,500/- ஆகும்.
2.வாகன எண் மற்றும் அதன் வகை: TN 25 G 0601 Mahindra & Mahindra & Bolero DI/CRDE, டீசல் / 2012, 296891 கிலோ மீட்டர் ஓடியது, Engine No/ Chassis No: GPC4H69877/ MA1WE2GPKC2H87147, நிர்ணயம் செய்யப்பட்ட குறைந்தபட்ச விலை ரூ.84,000/- ஆகும்.
3.வாகன எண் மற்றும் அதன் வகை: TN 25 G 0378 Mahindra & Mahindra & Bolero, டீசல் /2007, 315040 கிலோ மீட்டர் ஓடியது, Engine No/ Chassis No: DT74A10134/ MA1WE2DTB72A13265, நிர்ணயம் செய்யப்பட்ட குறைந்தபட்ச விலை ரூ.52,500/- ஆகும்.
4.வாகன எண் மற்றும் அதன் வகை: TN 25 G 0311 Mahindra & Mahindra & Bolero,டீசல் /2007, 338510 கிலோ மீட்டர் ஓடியது, Engine No/ Chassis No: DT74J11440/ MA1WE2DTB72K48518, நிர்ணயம் செய்யப்பட்ட குறைந்தபட்ச விலை ரூ. 26,500/- ஆகும்.
இவ்வாறு திருவண்ணாமலை கலெக்டர் வந்தனா கார்க் தெரிவித்துள்ளார்.

0 Comments