திருவண்ணாமலை மாவட்டத்தில் கைரேகை வைத்து ரேஷன் கார்டை புதுப்பிக்காதவர்கள் 1,52,861 பேர் என கலெக்டர் வந்தனா கார்க் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
திருவண்ணாமலை மாவட்டத்தில் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் 2013 இன் கீழ் வழங்கப்பட்டுள்ள அனைத்து அட்டைகளில் இடம் பெற்றுள்ள அனைத்து உறுப்பினர்களின் ஆதார் விவரங்களை உறுதிப்படுத்தும் பொருட்டு விரல் ரேகை அடிப்படையிலான சரிபார்ப்பு செயல்முறையை மேற்கொள்ள இந்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
மேற்படி இப்பணி திருவண்ணாமலை மாவட்டத்தில் 93.47 சதவீதம் நிறைவடைந்துள்ளது. கைரேகை வைத்து புதுப்பிக்க வேண்டியவர்களின் எண்ணிக்கை 1,52,861 ஆக உள்ளது. எனவே ரேஷன் கடைக்கு குடும்ப அட்டையுடன் சென்று கை ரேகை வைத்து e KYC புதுப்பித்துக் கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.
கைரேகை விழாதவர்கள், குழந்தைகள், முதியோர்கள் ஆகியோர் தங்களது ஆதார் அட்டையில் விரல் ரேகை மற்றும் கண் பதிவை புதுப்பித்த பின்னரே e KYC யில் பதிவு செய்ய இயலும்.
ஆதார் அட்டையில் விரல் ரேகை, கண் பதிவு புதுப்பிக்க சம்மந்தப்பட்ட வட்டங்களில் உள்ள ஆதார் மையங்களை அணுகி கை ரேகை புதுப்பித்த பின் சம்மந்தப்பட்ட குடும்ப உறுப்பினர் குடும்ப அட்டையுடன் நியாய விலைக்கடைக்கு சென்று 02.08.2026 ஞாயிறு அன்று நடைபெறும் சிறப்பு முகாமில் கலந்துகொண்டு e KYC பதிவை புதுப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு கலெக்டர் வந்தனா கார்க் தெரிவித்துள்ளார்.


0 Comments