ரூ.25 ஆயிரம் ஊதியத்தில் அரசு மகளிர் திட்டத்தில் வேலை

தமிழ்நாடு அரசு மகளிர் திட்டத்தில் ரூ.25 ஆயிரம் ஊதியத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

வந்தனா கார்க்

இது குறித்து திருவண்ணாமலை கலெக்டர் வந்தனா கார்க் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, 

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்ப்பில் உள்ளாட்சி அமைப்பு நிறுவனங்கள் மற்றும் சமூக அடிப்படையிலான அமைப்புகளின் ஒருங்கிணைந்த செயல்பாட்டினை முழுமையாக்கும் திட்டப் பணியின் இரண்டாம் கட்ட செயல்பாடுகள் மேலும் 15 மாவட்டங்களில் விரிவுப்படுத்தப்படவுள்ளது. இதற்கென மாநில, மாவட்ட மற்றும் வட்டார வள பயிற்றுநர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். 

திருவண்ணாமலை மாவட்டத்திற்கான தற்காலிகப் பணியிடங்கள்

1.மாநில வளப் பயிற்றுநர் - 1

(மூன்று மாவட்டத்திற்கு ஒருவர் என பின்னர் தேர்வு செய்யப்படுவர்)

2. மாவட்ட வளப் பயிற்றுநர் - 1

3. வட்டார வளப்பயிற்றுநர் - 18 (வட்டாரத்திற்கு ஒன்று வீதம்) 

வள பயிற்றுநர்களுக்கான மதிப்பூதியம் மற்றும் பயணப்படி விவரம்

மாநில வளப் பயிற்றுநருக்கு அதிகப்பட்சமாக 10 நாட்களுக்கு ரூ.1000-மும், கண்காணிப்பு மேற்பார்வை மற்றும் ஆவணப்படுத்துதலுக்கு அதிகப்பட்சமாக 15 நாட்களுக்கு ரூ.750-ம், பயணப்படி 15 நாளுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.250 என அதிகப்பட்சமாக ரூ.25 ஆயிரம் கிடைக்கும். 

மாவட்ட வளப் பயிற்றுநருக்கு 10 நாட்களுக்கு ரூ.750-ம், அதிகப்பட்சமாக 15 நாட்களுக்கு ரூ.500-ம், பயணப்படி 25 நாளுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.120 என அதிகப்பட்சமாக ரூ.18 ஆயிரம் கிடைக்கும். வட்டார வளப்பயிற்றுநருக்கு அதிகப்பட்சமாக 10 நாட்களுக்கு ரூ.450-மும், கண்காணிப்பு மேற்பார்வை மற்றும் ஆவணப்படுத்துதலுக்கு அதிகப்பட்சமாக 15 நாட்களுக்கு ரூ.300-ம், பயணப்படி 25 நாளுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.60 என அதிகப்பட்சமாக ரூ.10 ஆயிரத்து 500-ம் கிடைக்கும். 

ரூ.25 ஆயிரம் ஊதியத்தில் அரசு மகளிர் திட்டத்தில் வேலை

மாநில வளப்பயிற்றுநர் 

1. பெண்கள் மற்றும் சுயஉதவிக்குழு உறுப்பினர்களுக்கு முன்னுரிமை.

2. கல்வித் தகுதி: சமூக கல்வி/சமூக அறிவியல்/ஊரக வளர்ச்சி/பெண்கள் கல்வி அல்லது சமூக பணியிடங்களில் ஏதேனும் ஒரு முதுகலைப் பட்டம். 

3. வயது: 01.06.2026 அன்று 30-45க்குள் 

4. அனுபவம்: 10 ஆண்டுகள், சுயஉதவிக்குழு/கூட்டமைப்பில் பணியாற்றிய அனுபவம்/பயிற்றுநர்/சமூக பணி நிறுவனத்தில் பணியாற்றியது அல்லது அரசின் திட்டத்தில் ஊரக பணிகளில்; பணியாற்றி இருத்தல். 

தகுதிகள் வருமாறு,  

மாவட்ட வளப்பயிற்றுநர் 

1. பாலினம் : பெண்கள் (சுயஉதவிக்குழு உறுப்பினர்களுக்கு முன்னுரிமை ) 

2. வயது 30-35 (1.6.2026 அன்றுள்ளபடி)

3. தகுதி : ஏதேனும் முழு நேரக்கல்வி முறையில் முதுகலை படிப்பில் ஒரு பட்டப்படிப்பு 

4. அனுபவம் : 4 வருடங்கள்  

வட்டார வளப்பயிற்றுநர் 

1. பாலினம் : பெண்கள் (சுயஉதவிக்குழு உறுப்பினர்களுக்கு முன்னுரிமை ) 

2. வயது 25-45 (1.6.2026 அன்றுள்ளபடி)

3. தகுதி : ஏதேனும் முழு நேரக்கல்வி முறையில் முதுகலை படிப்பில் ஒரு பட்டப்படிப்பு 

4. அனுபவம்: 3 வருடங்கள்.

ரூ.25 ஆயிரம் ஊதியத்தில் அரசு மகளிர் திட்டத்தில் வேலை

மேலும் மாநில, மாவட்ட மற்றும் வட்டார வள பயிற்றுநர்களுக்கான கூடுதல் தகுதிகள் பின்வருமாறு, 

1. மொழி: தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுத, பேச தெரிந்திருத்தல். 

2. திறன்: தகவல் பரிமாற்றத்தில் தகுந்த திறன், ஒருங்கிணைப்பு, மனித உறவுகளை பேணுவதில் ஆற்றல், கைபேசி, செயலிகளை கையாள்வது கணினியில் word, excel இணைய பயன்படுத்துதலில் போதிய அறிவு பெற்றிருத்தல் அவசியம். 

இப்பதவிக்கான தகுதி மற்றும் விருப்பமுள்ளவர்கள் கீழ்கண்ட முகவரிக்கு தபால் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ விண்ணப்பங்களை விண்ணப்பம் 29.06.2026 க்குள் விண்ணப்பம், தகுதி குறித்த சுய சான்றிட்ட நகல்களுடன் விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது.

இப்பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு, நேர்காணல் முறையில் தேர்வு செய்யப்படுவர்.

இது 24 மாத காலவரையறை  கொண்ட தற்காலிக பணியிடங்களாகும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் உரிய சான்றுகளின் நகல்களுடன் அலுவலக வேலை நாட்களில் காலை 10.00 மணி முதல் 5.45 மணி வரை விண்ணப்பங்கங்களை  சமர்ப்பிக்க வேண்டிய முறை/ முகவரி :

திட்ட இயக்குநர்,

மாவட்ட இயக்க மேலாண்மை அலகு,

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், 

மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கட்டிடம்,

மாவட்ட ஆட்சியர் வளாகம்,வேங்கிக்கால், 

திருவண்ணாமலை மாவட்டம் - 606604. 

விண்ணப்பிக்க கடைசி நாள் : 29.06.2026.

மேலும் விபரங்களுக்கு http://tncdw.org என்ற இணையதளத்தை அணுகலாம். 

இவ்வாறு கலெக்டர் வந்தனா கார்க் தெரிவித்துள்ளார். 

Post a Comment

0 Comments