திருவண்ணாமலை புதிய பஸ் நிலையத்திலிருந்து 13-ஆம் தேதி முதல் அனைத்து பஸ்களும் இயங்கும் என கலெக்டர் வந்தனா கார்க் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மாவட்ட கலெக்டர் வந்தனா கார்க் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது,
திருவண்ணாமலை மாநகரம், திண்டிவனம் சாலையில் திறக்கப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையம் 13.01.2026 முதல் செயல்பட்டு வருகிறது. இந்த புதிய பேருந்து நிலையத்தில் கூடுதல் பேருந்துகள் நிறுத்துமிடத்திற்கான பணிகள் நடைபெற்று வந்ததால், புதிய பேருந்து நிலையத்திலிருந்து சென்னை, விழுப்புரம், புதுச்சேரி, திருச்சி, மதுரை, நாகர்கோவில், கும்பகோணம் ஆகிய இடங்களுக்குச் செல்லும் புறநகர் பேருந்துகள் மட்டும் இயக்கப்பட்டு வருகிறது.
பழைய பேருந்து நிலையத்திலிருந்து வேலூர், ஆரணி, காஞ்சிபுரம், வந்தவாசி, கிருஷ்ணகிரி, தருமபுரி, ஒசூர், பெங்களுர், சேலம், ஈரோடு, கோயம்புத்தூர், சித்தூர், திருப்பதி ஆகிய இடங்களுக்கான புறநகர் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
தற்போது, புதிய பேருந்து நிலையத்தில் கூடுதல் பேருந்துகள் நிறுத்துமிடத்திற்கான பணிகள் அனைத்தும் முடிவுற்ற நிலையில், இரண்டு இடங்களில் பேருந்து நிலையங்கள் செயல்படுவதால் பொது மக்கள் மற்றும் பயணிகளுக்கு ஏற்படும் இடையூறுகளைத் தவிர்க்கும் பொருட்டு, திருவண்ணாமலையிலிருந்து இயக்கப்படும் அனைத்து புறநகர் பேருந்துகளும் புதியதாக திறக்கப்பட்ட கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்திலிருந்து சோதனை முயற்சியாக பின்வரும் வழித்தடங்கள் வாயிலாக 13.07.2026 முதல் இயக்கப்படும்
மார்க்கம்-1.செஞ்சி, புதுச்சேரி , சென்னை
உள்ளே வரும் வழி-நாச்சிப்பட்டு புறவழிச்சாலை, புதிய பேருந்து நிலையம்
வெளியே செல்லும் வழி-நாச்சிப்பட்டு புறவழிச்சாலை
மார்க்கம்-2.வேட்டவலம், விழுப்புரம்
உள்ளே வரும் வழி-ஏந்தல் புறவழிச்சாலை-நாச்சிப்பட்டு புறவழிச்சாலை புதிய பேருந்து நிலையம்
வெளியே செல்லும் வழி-நாச்சிப்பட்டு புறவழிச்சாலை , ஏந்தல் புறவழிச்சாலை
மார்க்கம்-3.திருக்கோவிலூர், பண்ருட்டி, கடலுர், திருச்சி
உள்ளே வரும் வழி-திருக்கோவிலூர் சிலை ரவுண்டானா, திருவள்ளுவர் சிலை, விஜயா மால், ஏந்தல் புறவழிச்சாலை-நாச்சிப்பட்டு புறவழிச்சாலை, புதிய பேருந்து நிலையம்
வெளியே செல்லும் வழி-நாச்சிப்பட்டு புறவழிச்சாலை , ஏந்தல் புறவழிச்சாலை , விஜயா மால், திருவள்ளுவர் சிலை , திருக்கோவிலூர் சாலை ரவுண்டானா
மார்க்கம்-4.கள்ளக்குறிச்சி, தண்டராம்பட்டு, தானிப்பாடி
உள்ளே வரும் வழி-நல்லவன்பாளையம் புறவழிச்சாலை , தேனிமலை பணிமனை, அங்காளம்மன் கோவில் யு டர்ன் எடுத்து சண்முகா கல்லூரி, அணைக்கரை புறவழிச்சாலை , திருக்கோவிலூர் சாலை ரவுண்டானா , திருவள்ளுவர் சிலை, விஜயா மால் ஏந்தல் புறவழிச்சாலைநாச்சிப்பட்டு புறவழிச்சாலை, புதிய பேருந்து நிலையம்
வெளியே செல்லும் வழி-நாச்சிப்பட்டு புறவழிச்சாலை , ஏந்தல் புறவழிச்சாலை , விஜயா மால் , திருவள்ளுவர் சிலை , ஆடுதொட்டி தெரு, கல் நகர் , அங்காளம்மன் கோவில் , தேனிமலை பணிமனை , நல்லவன்பாளையம் புறவழிச்சாலை
மார்க்கம்-5.மணலூர்பேட்டை
உள்ளே வரும் வழி-அணைக்கரை புறவழிச்சாலை , நல்லவன்பாளையம் புறவழிச்சாலை , தேனிமலை பணிமனை , அங்காளம்மன் கோவில் யு டர்ன் எடுத்து சண்முகா கல்லூரி , அணைக்கரை புறவழிச்சாலை , திருக்கோவிலூர் சாலை ரவுண்டானா , திருவள்ளுவர் சிலை , விஜயா மால் , ஏந்தல் புறவழிச்சாலை , நாச்சிப்பட்டு புறவழிச்சாலை புதிய பேருந்து நிலையம்
வெளியே செல்லும் வழி-நாச்சிப்பட்டு புறவழிச்சாலை , ஏந்தல் புறவழிச்சாலை , விஜயா மால் , திருவள்ளுவர் சிலை , ஆடுதொட்டி தெரு, கல் நகர் , அங்காளம்மன் கோவில் , சண்முகா கல்லூரி , அணைக்கரை புறவழிச்சாலை
மார்க்கம்-6.போளூர் , ஆரணி , வேலூர்
உள்ளே வரும் வழி-தீபம் நகர் புறவழிச்சாலை , மாவட்ட ஆட்சியர் அலுவலகம் , அண்ணா நுழைவு வாயில், அறிவொளி பூங்கா (இடது புறம்) (பழைய பேருந்து நிலையம் அருகில்) , இரயில்வே கேட், சேரியந்தல் புறவழிச்சாலை, நாச்சிப்பட்டு புறவழிச்சாலை, புதிய பேருந்து நிலையம்
வெளியே செல்லும் வழி-புதிய பேருந்து நிலையம்,பெரியார்சிலை, பழைய பேருந்து நிலையம், அண்ணா நுழைவு வாயில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், தீபம் நகர் புறவழிச்சாலை
மார்க்கம்-7.செங்கம் , திருப்பத்தூர்
உள்ளே வரும் வழி-அத்தியந்தல் புறவழிச்சாலை , அடி அண்ணாமலை , அபய மண்டபம் , அண்ணா நுழைவு வாயில், அறிவொளி பூங்கா (இடது புறம்) (பழைய பேருந்து நிலையம் அருகில்) , இரயில்வே கேட், சேரியந்தல் புறவழிச்சாலை, நாச்சிப்பட்டு புறவழிச்சாலை, புதிய பேருந்து நிலையம்
வெளியே செல்லும் வழி-நாச்சிப்பட்டு புறவழிச்சாலை, ஏந்தல் புறவழிச்சாலை, விஜயாமால், திருவள்ளுவர் சிலை, ஆடுதொட்டி தெரு, கல் நகர், காமராஜர் சிலை, கலைஞர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, அய்யம்பாளையம் புறவழிச்சாலை.
மார்க்கம்-8.சேலம், தருமபுரி, பெங்களுர், ஈரோடு, கோயம்பத்தூர்
உள்ளே வரும் வழி-அய்யம்பாளையம் புறவழிச்சாலை, தண்டராம்பட்டு புறவழிச்சாலை, மணலூர்பேட்டை புறவழிச்சாலை, திருநேர்த்தியம்மன் கோவில், ஏந்தல் புறவழிச்சாலை, நாச்சிப்பட்டு புறவழிச்சாலை, புதிய பேருந்து நிலையம்
வெளியே செல்லும் வழி-நாச்சிப்பட்டு புறவழிச்சாலை, ஏந்தல் புறவழிச்சாலை, திருநேர்த்தியம்மன் கோவில், மணலூர்பேட்டை புறவழிச்சாலை, தண்டராம்பட்டு புறவழிச்சாலை, அய்யம்பாளையம் புறவழிச்சாலை
மார்க்கம்-9.காஞ்சி , புதுப்பாளையம் , மேல்சோழங்குப்பம்
உள்ளே வரும் வழி-ஆடையூர் , அபய மண்டபம் , அண்ணா நுழைவு வாயில், அறிவொளி பூங்கா (இடது புறம்) (பழைய பேருந்து நிலையம் அருகில்) , இரயில்வே கேட், சேரியந்தல் புறவழிச்சாலை, நாச்சிப்பட்டு புறவழிச்சாலை, புதிய பேருந்து நிலையம்
வெளியே செல்லும் வழி-புதிய பேருந்து நிலையம், பெரியார்சிலை, பழைய பேருந்து நிலையம், அண்ணா நுழைவு வாயில், அபய மண்டபம், ஆடையூர்.
மார்க்கம்-10.சேத்துப்பட்டு , வந்தவாசி , காஞ்சிபுரம்
உள்ளே வரும் வழி-சேரியந்தல் புறவழிச்சாலை , நாச்சிப்பட்டு புறவழிச்சாலை, புதிய பேருந்து நிலையம்
வெளியே செல்லும் வழி-புதிய பேருந்து நிலையம், பெரியார்சிலை, பழைய பேருந்து நிலையம், அறிவொளி பூங்கா (வலது புறம்) , ரயில்வே கேட், சேரியந்தல் புறவழிச்சாலை.
இவ்வாறு கலெக்டர் வந்தனா கார்க் தெரிவித்துள்ளார்.
அபாயம்
திருவண்ணாமலை ரயில்வே ஸ்டேஷன் அருகிலும், மேம்பாலத்திற்கு அடியிலும் ரூ.34 கோடியில் திமுக ஆட்சியில் புது பஸ் ஸ்டாண்ட் கட்டப்பட்டது. பஸ் ஸடாண்டிற்கும், ரயில்வே ஸ்டேஷனுக்கு இடையே தண்டவாளம் செல்கிறது. பயணிகள் தண்டவாளத்தை கடக்க நடைமேம்பாலம் அமைக்கப்படவில்லை.
இதன் காரணமாக பொதுமக்கள், பயணிகள், மாணவ-மாணவிகள் ரயில்வே தண்டவாளத்தை கடந்து செல்வதால் அசாம்பாவிதங்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. இந்நிலையில் படிகட்டுகளும், எஸ்கலேட்டர் அதாவது நகரும் படிக்கட்டுகளும் இங்கு அமைக்கும் வேலைகள் மந்த கதியில் நடந்து வருகிறது. புதிய பஸ் நிலையம் 13-ஆம் தேதி முதல் முழுமையாக இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் அதிக அளவிலான பயணிகள் தண்டவாளத்தை கடக்கும் சூழல் ஏற்படும்.






0 Comments