அதிரடிக்கு பெயர் போன இளம் வயது அதிகாரி திருவண்ணாமலை எஸ்.பியாக நியமிக்கப்பட்டிருக்கிறார்.
திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பதவி வகித்து வந்த சுதாகர் நேற்று அந்தப் பதவியில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டார். அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்ட கார்த்திகேயன் பதவியேற்காமல் இருந்து வந்த நிலையில் அவர் ஏற்கனவே வகித்து வந்த அடையாறு துணை கமிஷனர் பதவியில் தொடர்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக கோயம்பேடு துணை போலீஸ் கமிஷனராக இருந்த உதயகுமார் நியமிக்கப்பட்டிருக்கிறார்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த 34-வது வயதான உதயகுமார் ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் 2021-ல் ஐபிஎஸ் அதிகாரி ஆனார். ஸ்ரீபெரும்புதூரில் ஏஎஸ்பியாக பணியாற்றினார். பிறகு கோவை மாநகர காவல் துணை ஆணையராக நியமிக்கப்பட்டார். அதன் பிறகு கோயம்பேடு துணை போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டார்.
![]() |
| கார்த்திகேயன் |
காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரம் பஜார் பகுதியில் உள்ள சட்டவிரோத கொடிக்கம்பங்களை அகற்றுமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில் கொடிக்கம்பங்களை அகற்ற ஏ எஸ் பி உதயகுமார் சென்றார். அப்போது திமுக ஒன்றிய குழுத் தலைவர் கருணாநிதி, தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கொடி கம்பங்களைத் தானே அகற்ற வேண்டும். இங்கு வந்து ஏன் அகற்றுகிறீர்கள் என வாக்குவாதம் செய்தார்.
![]() |
| சுதாகர் |
தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை, நகராட்சி இடங்களில் உள்ள கொடிக் கம்பங்களை அகற்ற உத்தரவு உள்ளது. என்னை வேலை செய்ய விடுங்கள் எனக்கூறி அப்போது ஆளுங்கட்சியான திமுக கொடி கம்பத்தையும், திமுகவினர் பெயர் குறித்த கல்வெட்டையும் உதயகுமார் அதிரடியாக அகற்றினார். இது அப்பகுதியில் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.



0 Comments