திருவண்ணாமலை தெற்கு மாவட்ட தவெக அலுவலகத்தில் அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி 100 பேர் தெற்கு மாவட்ட செயலாளர் கே.பாரதிதாசன் முன்னிலையில் தவெகவில் இணைந்தனர்.
கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்று முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் யாரும் எந்தக்கட்சியும்எதிர்பார்க்காத அளவிற்கு தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்டுகள், முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளின் எம்.எல்.ஏ க்கள் ஆதரவுடன் த.வெ.க தலைவர் விஜய் தமிழக முதல்-அமைச்சராக கடந்த மாதம்( மே) 10ந் தேதி பொறுப்பேற்றுக் கொண்டார்.
அதைத்தொடர்ந்து த.வெ.க விற்கு பலம் சேர்க்கும் வகையில் பல்வேறு கட்சிகளிலிருந்தும் குறிப்பாக அதிமுகவில் வெற்றி பெற்ற சில எம்.எல்.ஏ;க்கள் முதல் முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்எல்ஏக்கள் உட்பட கட்சியில் பல்வேறு பதவிகளை வகித்து வந்த பெரும்பாலான அ.தி.மு.க வினர் தமிழகம் முழுவதும் அக்கட்சியிலிருந்து விலகி த.வெ.க கட்சியில் இணைந்து வருகின்றனர்.
இந்நிலையில் திருவண்ணாமலை உழவர் சந்தை அருகில் உள்ள தவெக திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அலுவலகத்தில் நடந்த பல்வேறு கட்சியினர் தவெகவில் இணையும் விழா இன்று நடந்தது.
திருவண்ணாமலை மாநகராட்சி 7வது வார்டு பகுதியை சேர்ந்த அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு கிழக்கு மாவட்ட இணை செயலாளர் கே.பெருமாள் தலைமையில் அக்கட்சியிலிருந்து விலகியும், தவெக திருவண்ணாமலை தெற்கு ஒன்றிய செயலாளர் கே.மணிரத்தினம் ஏற்பாட்டின் பேரில், தலையாம்பள்ளத்தில் இருந்து தேமுதிக நிர்வாகிகள் பி.பழனி, பி.மகாலட்சுமி, ஜி.சரசு ஆகியோர் அக்கட்சியிலிருந்து விலகியும், தவெக தண்டராம்பட்டு தெற்கு ஒன்றிய செயலாளர் சூர்யா ஏற்பாட்டின் பேரில் ரெட்டியார்பாளையம் அதிமுக கிளை செயலாளர் என்.பாண்டியன் தலைமையில் ராஜேந்திரன், ஏழுமலை உள்ளிட்டோர் அக்ட்சியிலிருந்து விலகியும், அதே கிராமத்தை சேர்ந்த பாமக நிர்வாகி ராஜா தலைமையில் பாமகவினர் அக்கட்சியிலிருந்து விலகியும் தெற்கு மாவட்ட செயலாளர் கே.பாரதிதாசன் முன்னிலையில் தவெகவில் இணைந்தனர்.
திருவண்ணாமலை அவலூர்பேட்டை சாலையை சேர்ந்த தொழிலதிபர் ஏ. ஆண்டனி, திருவண்ணாமலையை சேர்ந்த தமிழ்மாநில பகுஜன் சமாஜ் கட்சி முன்னாள் மாவட்ட தலைவர் எல்ஐசி இரா.சக்திவேலும் தவெகவில் இணைந்தனர். நேற்று 100க்கும் மேற்பட்டோர் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி தவெகவில் இணைந்துள்ளனர்.
இந்த நிகழ்ச்சியின் போது தவெக மாவட்ட இணை செயலாளர் கலைச்செல்வன்,மாவட்ட பொருளார் கே.இளங்கோவன், கமலா பீடம் நிறுவனர் சீதா.சீனிவாசன், மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் டாக்டர் எம்.பழனி உடனிருந்தனர்.
அதிமுக கவுன்சிலர் விலகல்
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் பேரூராட்சி 6-வது வார்டு அ.தி.மு.க கவுன்சிலர் எம்.ஆர்.கோவர்த்தனன் தலைமையில், ஒன்றிய அ.தி.மு.க துணை செயலாளர் சிறுநாத்தூர் ஆறுமுகம், ஒன்றிய இணைச் செயலாளர் பொலக்குணம் முருகன், நிர்வாகி பழனி உட்பட 20பேர் அ.தி.மு.க விலிருந்து விலகி திருவண்ணாமலை தெற்கு மாவட்ட த.வெ.க நிர்வாகி பெருமாள்நகர் கே.ராஜன் முன்னிலையில் த.வெ.க வில் இணைந்தனர்.
அதிமுக மாவட்ட செயலாளராகவும், சட்டமன்ற உறுப்பினராகவும் உள்ள எஸ்.ராமச்சந்திரன் கட்டுப்பாட்டில் உள்ள திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூரில் அதிமுகவினர் பலர் அக்கட்சியிலிருந்து விலகி தவெகவில் இணைந்து வருவது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


_Flag%20copy.webp)
0 Comments