இடிந்து விழுந்த எ.வ.வேலு கட்டிய பாலம் குறித்து விசாரணை-இபிஎஸ்

இடிந்து விழுந்த எ.வ.வேலு கட்டிய பாலம் குறித்து விசாரணை-இபிஎஸ்

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று மாலை ஆரணி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சேவூர் வெளிவட்டச் சாலை எம்ஜிஆர் ஜெயலலிதா சிலை அருகில் கூடியிருந்த பெருந்திரளான மக்கள் மத்தியில் சிறப்புரை ஆற்றினார்.

அவர் பேசியதாவது

ஸ்டாலின் நெல்லையில் கோபத்தைக் கக்குகிறார் எரிச்சலை வெளிப்படுத்துகிறார். எனக்கு உயிர் கொடுத்து ஆளாக்கிய கலைஞரை நான் வீட்டுச் சிறையில் வைத்திருந்ததாக இபிஎஸ் நாக்கில் நரம்பில்லாமல் பேசுவதாகச் சொல்கிறார்.

நான் பேசியதை நன்கு கேளுங்கள். உங்கள் கோபத்தை என்னிடம் காட்டாதீர்கள். உங்கள் துணை பொதுச்செயலாளர் ஆராசாவிடம் காட்டுங்கள். அவர்தான் ஆடியோவில் ஒரு செய்தி சொன்னார் அது இந்தியா அளவில் வைரலாகிறது. அதைத்தான் நான் சொன்னேன் என் மீது கோபப்பட்டு என்ன பிரயோஜனம்..? ராசா மீது கோபப்பட்டால் உண்மையைச் சொல்லிவிடுவார் என்பதால் பயம்.

ராசா சொன்னதை தான் நான் சொன்னேன். அப்பாவை சிறையில் அடைப்பது நியாயமா..? உங்களை ஆளாக்கி இந்தியாவே உங்களை பாராட்டுகின்ற அளவுக்கு எம்.எல்.ஏ அமைச்சர் துணை முதல்வர் செயல் தலைவர் ஆக்கினாரே அதற்காக உங்கள் தந்தையை வீட்டுச் சிறையில் வைத்ததாக ராசா சொல்கிறார். அழகிரியும் சொல்றார். (அழகிரி பேசியதற்கான ஆதாரத்தை காட்டினார்)

ராசா உண்மையைச் சொன்னால் இருக்கும் இடம் வேறாக மாறிவிடும். ஸ்டாலின் பேசப்பேச அது உண்மையாக இருக்குமோ என்று தோன்றுகிறது. அண்ணனை ஒதுக்கிவிட்டீர்கள் தங்கையை மாநில அரசியலுக்கு வராமல் தடுத்துவிட்டீர்கள். உங்க அப்பா கடைசி வரை உங்களுக்கு தலைவர் பதவி கொடுக்கவில்லை அந்த அளவுக்கு நம்பிக்கைக்கு பாத்திரமாக இருந்தவர் ஸ்டாலின்.

அதிமுக ஆட்சிக்கு வந்ததும் ஆராசா ஆடியோ செய்தியை விசாரணை மேற்கொண்டு சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். கலைஞர் அவர்களை வீட்டுச் சிறையில் வைத்தவர்கள் சட்ட ரீதியாக விசாரிக்கப்பட்டு உண்மையிருந்தால் அதிமுக அரசு நடவடிக்கை எடுக்கும். அவரும் முன்னாள் முதல்வர்தானே. தந்தைக்கே இந்த கதி என்றால் நாட்டு மக்களுக்கு என்ன கதி என்று எண்ணிப்பாருங்கள்.

இடிந்து விழுந்த எ.வ.வேலு கட்டிய பாலம் குறித்து விசாரணை-இபிஎஸ்

காட்பாடியில் நம் வேட்பாளர் ராமுவுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களியுங்கள்.கலசப்பாக்கம் தொகுதியில் முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி செய்யாறு தொகுதியில் முன்னாள் அமைச்சர் முக்கூர் சுப்ரமணியன் கீழ்பென்னாத்தூர் தொகுதியில் முன்னாள் அமைச்சர் ராமச்சந்திரன் ஆரணி தொகுதியில் முன்னாள் எம்.எல்.ஏ ஜெயசுதா நிறுத்தப்பட்டுள்ளனர். செங்கம் தொகுதியில் டி.எஸ்.வேலு வந்தவாசி தொகுதியில் ராணி ஆகியோர் நிறுத்தப்பட்டுள்ளனர். இவர்களுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற வையுங்கள்.

நமது கூட்டணியில் திருவண்ணாமலை தொகுதியில் பாஜக வேட்பாளர் ஏழுமலைக்கு தாமரை சின்னத்தில் வாக்களியுங்கள். கூட்டணியில் உள்ள பாமக வேட்பாளர் சி.ஆர்.பாஸ்கரன் போளூர் வேட்பாளர் அவருக்கு மாம்பழம் சின்னத்தில் வாக்களியுங்கள். இவர்கள் அனைவரும் வெல்ல வேண்டும்.

இந்த மாவட்டத்தில் ஒரு தலை சிறந்த நெடுஞ்சாலைத்துறை விஞ்ஞானி ஒருவர் இருக்கிறார். ஆற்றைக் கடப்பதற்கு பாலம் கட்டுவார்கள். இவர் கட்டிய பாலம் தண்ணீரில் அடித்துக்கொண்டு போய்விட்டது. அது யாருடைய துறை..? எவ.வேலு. அவர் தென்பெண்ணை ஆற்றில் தரமில்லாத பாலம் கட்டினார். நிதி அதிகமாக இருப்பதால் பாலம் உயரத்தைக் குறைத்து கட்டினாராம்

பெரிய எஞ்சினியராக இவரை நினைத்துக்கொண்டு 15 கோடியில் கட்டிய பாலம் தண்ணீரில் போய்விட்டது. இன்னும் 3 கோடி ரூபாய் கூடுதலாக செலவிட்டு உயரமாகக் கட்டியிருந்தல் போயிருக்காது. இதுபற்றி விசாரித்து அதிமுக ஆட்சியில் சரியான நடவடிக்கை எடுக்கப்படும். மக்கள் வரிப் பணத்தை வீணாக்கிவிட்டீர்கள். பொறியாளர் வைத்து முறையாகக் கட்டியிருக்க வேண்டும்.

நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் வேலு முதலில் அதிமுகவில் அடையாளம் காட்டினோம். அமைச்சர்களில் பாதிப் பேர் அதிமுககாரர்கள். 8 பேர் அமைச்சர் 19 பேர் எம்.எல்.ஏ.வுக்கு நிற்கிறார்கள். வேலுவை பக்கத்தில் நிற்கவைத்து உதயநிதி ஓட்டு கேட்கிறார் இவர் எப்போது கட்சிக்கு வந்தார்? அவர் எப்போது கட்சிக்கு வந்தார்? அதிகாரத்துக்காக அடிமையாக இருக்கும் வேலுவே உங்கள் தகுதி அவ்வளவுதான். திருவண்ணாமலை தொகுதியில் இவர் தான் வேட்பாளர் என்று உதயநிதி பிரசாரம் செய்கிறார். இதுதான் திமுக.

இடிந்து விழுந்த எ.வ.வேலு கட்டிய பாலம் குறித்து விசாரணை-இபிஎஸ்

போதைப் பொருள் நிறைந்த மாநிலம் தமிழ்நாடு. எங்கே பார்த்தாலும் கஞ்சா. திமுக ஆட்சியின் ஒரே ஆண்டில் கஞ்சா புழக்கம் அதிகரிப்பு எதிர்க்கட்சி என்ற முறையில் முதல்வர் கவனத்துக்கு கொண்டு வந்தேன். பேட்டி கொடுத்தோம் ஒன்னுமே நடக்கலை. ஏனெனில் துனை நிற்பது திமுக நிர்வாகிகள். அதனால் காவல்துறை தடுக்க முடியலை. அதிமுக ஆட்சி அமைந்து 3 மாதத்தில் கஞ்சா ஒழிக்கப்படும். திமுக வாரிசு அரசியல் குடும்ப ஆட்சி தேவையா? முடிவு கட்டுவீர்களா?

திமுக எம்.எல்.ஏ நடத்தும் மருத்துவமனையில் ஏழைகளின் கிட்னியை திருடுகிறார்கள். இதுபற்றி குழு போட்டு ஆய்வுசெய்து முறைகேடு உண்மை என்று கண்டுபிடித்தும் நடவடிக்கை எடுக்கலை. அதிமுக ஆட்சிக்கு வந்ததும் கிட்னி முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். குமாரபாளையத்தில் ஒரு பெண்ணிடம் கிட்னிக்குப் பதிலாக கல்லீரலை எடுத்துவிட்டனர். எப்படிப்பட்ட கொடுமை பாருங்கள். உறுப்பு திருடும் அரசு தேவையா? திமுகவினர் மருத்துவமனைக்குப் போயிடாதீங்க போனவர்கள் ஸ்கேன் பண்ணி பாத்துக்கோங்க.

அதிமுக ஆட்சியில் எதுவும் செய்யவில்லை என்கிறார். அருள்மிகு அருணாச்சலேஸ்வர் திருக்கோயிலை தொல்லியல் துறை கைப்பற்ற நினைத்தபோது உச்சநீதிமன்றம் வரை சென்று வழக்குப்போட்டு மீட்டெடுத்தவர் அம்மா. 8 கோடியில் குடமுழக்கு கிரிவலப் பாதையை 67 கோடியில் சீர் செய்தோம். பக்தர்கள் தங்குவதற்கு 32 கோடியில் யாத்ரி நிவாஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மேம்பாடு வராகநதி மேம்பாடுஇ ஏரிகள் புனரமைப்பு குடிமராமத்து திட்டம் கொடுத்தோம்.

திமுக ஆட்சியின் வரிச்சுமையால் பாதிக்கப்பட்ட மக்களின் துன்பத்தைக் களைய உதவித்தொகை 10 ஆயிரம் ரூபாய் வங்கியில் செலுத்தப்படும். அதிமுக ஆட்சிக்கு வந்தால் எல்லா குடும்பத் தலைவிக்கும் மாதம் 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லாமல் ஃப்ரிட்ஜ் வழங்கப்படும். சரியான நேரத்திற்கு பணியிடங்களுக்குச் செல்வதற்கும் படிக்கச் செல்வதற்கும் ஏதுவாக 5 லட்சம் மகளிருக்கு அம்மா இரு சக்கர வாகனம் வாங்க தலா 25 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். 

ஒவ்வொரு குடும்பத்திற்கும் வாழ்வாதார உதவியாக 3 சிலிண்டர்கள் விலையின்றி வழங்கப்படும். பொங்கல் தொகுப்போடு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். தீபாவளி தோறும் பெண்களுக்கு பட்டுச்சேலை வழங்கப்படும். பெண்களைப் போல இனி ஆண்களும் நகரப் பேருந்துகளில் கட்டணம் இல்லாமல் பயணிக்கலாம். நகரப்பகுதியில் சாலையோர வியாபாரிகள் வாங்கிய கூட்டுறவு வங்கிக் கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும். 

இடிந்து விழுந்த எ.வ.வேலு கட்டிய பாலம் குறித்து விசாரணை-இபிஎஸ்

புதிதாக 2 லட்சம் ரூபாய் வரை எவ்வித ஜாமீனும் இல்லாமல் கடன் வழங்கப்படும். மாற்றுத்திறனாளிகள் கூட்டுறவு சங்கத்தில் வாங்கிய கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும். விலையில்லா அரிசி கடை அரிசி போன்று கொடுப்போம் ரேஷன் கடையில் இதுவரை விலை கொடுத்து வாங்கிக்கொண்டிருக்கும் பருப்பு மற்றும் சமையல் எண்ணெய் விலையின்றி வழங்கப்படும்.

வீடில்லாத அனைவருக்கும் அரசு சார்பில் நிலம் வாங்கி அற்புதமான கான்கிரீட் வீடு கட்டித்தரப்படும். பதிவு செய்த ஆட்டோ ஓட்டுனர்கள் புதிய ஆட்டோ வாங்க 75 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கப்படும். முதியோர் உதவித்தொகை 2 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். பட்டப்படிப்பு படித்து பதிவுசெய்த இளைஞர்களுக்கு மாதம் 2 ஆயிரம் ரூபாயும் பிளஸ் 2 வரை படித்தவர்களுக்கு ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும். 

கட்டிடத் தொழிலாளர்கள் உயிரிழப்பு ஏற்பட்டால் 25 லட்சம் நிவாரணம் படுகாயமடைந்தால் சிகிச்சை செலவை அரசே செலுத்தும். மாணவர் கல்விக் கடன் விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும். மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் பைபை ஸ்டாலின்.

இவ்வாறு எடப்பாடி பழனிச்சாமி பேசினார்.

Post a Comment

0 Comments