திருவண்ணாமலை மாவட்ட ஏகலைவா மாதிரி உண்டி உறைவிட மேல்நிலைப்பள்ளியில் 2026-2027 ஆம் கல்வியாண்டிற்கு தொகுப்பூதிய ஆசிரியர் பணியிடங்களில் காலியாக உள்ள ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாதோர் பணியிடங்களை நிரப்பிட அரசு உத்தரவிடப்பட்டுள்ளது.
அதன்படி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கு 01 காலிப்பணியிடம் ரூ.18,000 தொகுப்பூதியமாகவும், இளநிலை ஆசிரியர் பணிக்கு 01 காலிப்பணியிடம் ரூ.15,000 தொகுப்பூதியமாகவும், கலை ஆசிரியர் பணிக்கு 01 காலிப்பணியிடம் ரூ.15,000 தொகுப்பூதியமாகவும், இசை ஆசிரியர் பணிக்கு 01 காலிப்பணியிடம் ரூ.15,000 தொகுப்பூதியமாகவும், ஆலோசகர் பணிக்கு 01 காலிப்பணியிடம் ரூ.15,000 தொகுப்பூதியமாகவும் வழங்கப்படும்.
செவிலியர் பணிக்கு 01 காலிப்பணியிடம் ரூ.15,000 தொகுப்பூதியமாகவும், இளநிலைச் செயலக உதவியாளர் பணிக்கு 02 காலிப்பணியிடம் ரூ.13,000 தொகுப்பூதியமாகவும், ஓட்டுநர் பணிக்கு 01 காலிப்பணியிடம் ரூ.15,000 தொகுப்பூதியமாகவும், மின்சாரம் மற்றும் குழாய் பராமரிப்பு பணியாளர் பணிக்கு 01 காலிப்பணியிடம் ரூ.10,000 தொகுப்பூதியமாகவும், தோட்டக்காரர் பணிக்கு 01 காலிப்பணியிடம் ரூ.10,000 தொகுப்பூதியமாகவும், உணவுக்கூட உதவியாளர் பணிக்கு 02 காலிப்பணியிடம் ரூ.10,400 தொகுப்பூதியமாகவும் காலிப்பணியிடங்களுக்கு தொகுப்பூதியம் வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் அனைத்து தற்காலிக பணியாளர்களுக்கும் மேற்காணும் பட்டியலின்படி பணியிடங்ளுக்கு எதிரே குறிப்பிடப்பட்டுள்ள தொகை தொகுப்பூதியமாக வழங்கப்படும்.
மேலும் தேர்வு செய்யப்படும் ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாதோர் தொகுப்பூதிய பணியாளர்கள் இந்த கல்வியாண்டு (2026-2027 ) முடியும் வரை மட்டுமே பணியில் தொடர முடியும். மேலும் பயிற்றுவித்தலில் ஏற்படும் குறைபாடுகள் மற்றும் நிர்வாகத்திற்கு குந்தகம் ஏற்படும் வகையில் செயல்படும் பணியாளர்கள் எவ்வித முன்னறிவிப்புமின்றி தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள்.
ஏகலைவா மாதிரி உண்டி உறைவிட மேல்நிலைப்பள்ளியில் காலியாக உள்ள 13 தொகுப்பூதிய அடிப்படையிலான காலிப்பணியிடங்களுக்கு பணிநாடுநர்களிடமிருந்து விண்ணப்பங்கள் ஏகலைவா மாதிரி உண்டி உறைவிட மேல்நிலைப்பள்ளி, புளியம்பட்டி, திருவண்ணாமலை மாவட்டம் என்ற முகவரிக்கு வந்து சேரவேண்டிய நாள் 03.08.2026
இத்தகவலை கலெக்டர் வந்தனா கார்க் தெரிவித்துள்ளார்.

0 Comments