திருவண்ணாமலை நாட்டுப்புறக் கலைப்பயிற்சி மையத்தில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் வந்தனா காரக் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது.
தமிழ்நாட்டின் 25 இடங்களில் பகுதி நேர நாட்டுப்புறக் கலைப்பயிற்சி மையங்கள் ஏற்படுத்தி கலைப் பயிற்சிகள் வழங்கிட நிதிஅமைச்சரால் அறிவிப்புகள் வெளியிடப்பட்டது.
தொடர்ந்து நாட்டுப்புற கலைகளைப் பாதுகாக்கவும் இப்பண்பாடு தொடர்ந்து வருங்காலங்களில் செழித்தோங்கவும் நாட்டுப்புற கலைகளில் பொது மக்களிடையே ஆர்வத்தினை ஏற்படுத்த வேண்டும் என்ற உயரிய நோக்கத்திலும் அழிந்து வரும் கலைகளில் இளைய தலைமுறையினருக்கு பயிற்சி அளித்து அக்கலைகளை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தினை செயல்படுத்தும் வகையிலும் நாட்டுப்புற கலைஞர்களுக்கு வாழ்வாதாரம் வழங்கும் நோக்கில் வேலைவாய்ப்பினை ஏற்படுத்தவும் நிதியமைச்சகத்தின் அறிவிப்பின் படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கலைபண்பாட்டுத் துறை கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் திருவண்ணாமலை மாவட்ட அரசு இசைப்பள்ளியில் பகுதி நேர நாட்டுப்புறக் கலைப்பயிற்சி மையத்தில் 2026-2027 கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வறுகிறது.
தமிழகத்தின் பாரம்பரிய நாட்டுப்புற கலைகளான தெருக்கூத்து, பெரியமேளம்,பம்பை,கிராமிய பாட்டு ஆகிய நான்கு கலைப் பிரிவுகளில் ஓராண்டு சான்றிதழ் பயிற்சி அளிக்கப்படுகிறது.
இப்பயிற்சியில் 17 வயதிற்கு மேற்பட்டவர்கள் வயது வரம்பின்றி அனைவரும் சேரலாம்இ 8 ஆம் வகுப்பு தேர்ச்சிக்கு மேல் பயின்றவர்கள். ஓராண்டு முடிவில் தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலை பல்கலைகழகம் மூலம் தேர்வுகள் நடத்தி சான்றிதழ் வழங்கப்படும். 8 ஆம் வகுப்புக்கு கீழ் பயின்றவர்களுக்கு பயிற்சியின் முடிவில் பங்கேற்புச்சான்றிதழ் வழங்கப்படும்;. சேர்க்கை கட்டணமாக ஆண்டிற்கு ரூ.500 மட்டும் செலுத்தப்படவேண்டும்.
இப்பயிற்சியில் சேர்ந்து பயில விண்ணப்பம் பெற தலைமை ஆசிரியர், மாவட்ட அரசு இசை பள்ளி கிரிவலப் பாதை, செங்கம் ரோடு, (நேரு யுவகேந்திரா அலுவலகம் பின்புறம்), சமுத்திரம் கிராமம், திருவண்ணாமலை 606 603. எனும் முகவரியில் நேரில் பெற்றுக் கொள்ளலாம்.
மேலும் விவரம் வேண்டுவோர் இசைப்பள்ளி அலுவலகத்தை 9442507657, ஒருங்கிணைப்பாளர் 8667399314 என்கிற எண்களில் தொடர்பு கொண்டு சேரலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


0 Comments