திருவண்ணாமலை மாவட்டத்தில் சுய கணக்கெடுப்பானது 17.07.2026 முதல் 31.07.2026 வரை நடைபெறவுள்ளதாக கலெக்டர் வந்தனா கார்க் தெரிவித்துள்ளார்.
இது குறித்து திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் வந்தனா கார்க் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
இந்திய நாட்டில் முதல் முறையாக முழுமையான டிஜிட்டல் முறையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி நடைபெறவுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் சுய கணக்கெடுப்பானது 17.07.2026 முதல் 31.07.2026 வரை நடைபெறவுள்ளது.
குடும்பத் தலைவர் அல்லது குடும்ப நபர்களில் ஒருவர் சுய கணக்கெடுப்பு (Self Enumeration) https://se.census.gov.in/என்ற இணையதளம் மூலம் வீடு இருப்பிடத்தை வரைபடத்தில் குறியிட்டபின் வீடுகள் மற்றும் வசதிகள் குறித்து காண்பிக்கும் 33 வினாக்களுக்கு உண்டான பதில்களை பதிவு செய்து கொள்ளலாம். இச்சுய கணக்கெடுப்பானது கணக்கெடுப்பாளரின் வருகைக்கு முன்னர் சுய கணக்கெடுப்பில் பதிவு செய்து கொள்ளலாம்.
குடும்பம் ஒன்றுக்கு ஒரு மொபைல் எண்ணில் மட்டுமே பதிவு செய்ய முடியும். வீடுகள் மற்றும் வசதிகள் குறித்து சுய கணக்கெடுப்பு இணையதளத்தில் பதிவு செய்த பின்பு 11 இலக்க கொண்ட சுய கணக்கெடுப்பு எண் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு SMS மூலமாக வரும். இந்த 11 இலக்கம் கொண்ட எண்ணினை வீட்டிற்கு வரும் கணக்கெடுப்பாளரிடம் வழங்க வேண்டும். இந்த சுய கணக்கெடுப்பானது எங்கிருந்து வேண்டுமென்றாலும் பதிவு செய்து கொள்ளலாம்.
அதனைத் தொடர்ந்து 01.08.2026 முதல் 30.08.2026 வரை வீடுகள் மற்றும் வீட்டுப்பட்டியல்கள் கணக்கெடுப்பு பணிகள் தொடங்கப்படவுள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது ஏற்படும் சந்தேகங்களுக்கு பதிலளிக்கும் பொருட்டு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.
கட்டுப்பாட்டு அறையினை 04175- 295216 என்ற தொலைபேசி எண்ணில் அலுவலக நேரத்தில் தொடர்பு கொள்ளலாம். மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான உதவி எண் (Help Desk)1855 ஆகும். மேலும் மேற்கண்ட கியுஆர் கோடை (QR Code) பயன்படுத்தி சுய கணக்கெடுப்பு செய்து கொள்ளலாம்.
இவ்வாறு வந்தனா கார்க் தெரிவித்துள்ளார்.




0 Comments