பழங்குடியினர் நலத்துறை சார்பாக சிறப்பு முகாம்கள்-கலெக்டர் தகவல்

திருவண்ணாமலை மாவட்டத்தில் பழங்குடியினர் சாதி சான்று, ரேஷன் கார்டு போன்றவைகளை பெறுவதற்கு வசதியாக சிறப்பு முகாம்கள் நாளை முதல் நடைபெற  உள்ளதாக கலெக்டர் வந்தனா கார்க்  தெரிவித்துள்ளார்.  

பழங்குடியினர் நலத்துறை சார்பாக சிறப்பு முகாம்கள்-கலெக்டர் தகவல்

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, 

தமிழ்நாடு பழங்குடியினர் நல வாரிய உறுப்பினர் சேர்க்கை, தமிழ்நாடு நரிக்குறவர் நல வாரிய உறுப்பினர் சேர்க்கை, சாதிச் சான்றிதழ், ஆதார் அட்டை மற்றும் குடும்ப அட்டை இல்லாத பழங்குடியின மக்கள் இணையவழி வாயிலாக விண்ணப்பித்து பெறுவதற்கு சிறப்பு முகாம்கள் 18.07.2026, 25.07.2026, 01.08.2026, 08.08.2026 மற்றும் 16.08.2026 ஆகிய நாட்களில் கீழ்க்கண்ட இடங்களில் நடைபெறவுள்ளது. 

வந்தவாசி வட்டத்திற்கு 18.07.2026 அன்று வந்தவாசி வட்டம், கீழ்கொடுங்காளூர் அரசு மேல்நிலைப்பள்ளியிலும், 25.07.2026 அன்று ஜவ்வாது மலை வட்டத்திற்கு, ஜமுனாமரத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்திலும், அனக்காவூர் வட்டத்திற்கு, அனக்காவூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும்,  பெரணமல்லூர் வட்டத்திற்கு, பெரணமல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளியிலும்,  செங்கம் வட்டத்திற்கு, செங்கம் வட்டாட்சியர் அலுவலகத்திலும்,  01.08.2026 அன்று போளூர் வட்டத்திற்கு, போளூர் வட்டாட்சியர் அலுவலகத்திலும் நடக்கிறது. 

பழங்குடியினர் நலத்துறை சார்பாக சிறப்பு முகாம்கள்-கலெக்டர் தகவல்

கலசபாக்கம் வட்டத்திற்கு, கலசபாக்கம் வட்டாட்சியர் அலுவலகத்திலும், செய்யார் வட்டத்திற்கு, செய்யார் வட்டாட்சியர் அலுவலகத்திலும், புதுப்பாளையம் வட்டத்திற்கு, செங்கம் வட்டாட்சியர் அலுவலகத்திலும், கீழ்பென்னாத்தூர் வட்டத்திற்கு,  கீழ்பென்னாத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்திலும், 08.08.2026 அன்று வெம்பாக்கம் வட்டத்திற்கு, ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, மாங்கால் கூட்ரோடு, வெம்பாக்கம் வட்டம், தெள்ளார் வட்டத்திற்கு, தெள்ளார் வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும், ஆரணி மேற்கு வட்டத்திற்கு, தச்சூர் சமத்துவபுரம் சமுதாய கூடத்திலும், ஆரணி வட்டத்திற்கு, ஆரணி வட்டாட்சியர் அலுவலத்திலும் நடக்கிறது. 

துரிஞ்சாபுரம் வட்டத்திற்கு, திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலகத்திலும், 16.08.2026 அன்று தண்டராம்பட்டு வட்டத்திற்கு, தண்டராம்பட்டு வட்டாட்சியர் அலுவலகத்திலும், சேத்பட் வட்டத்திற்கு, சேத்பட் வட்டாட்சியர் அலுவலகத்திலும், திருவண்ணாமலை Block, Municipality, Corporation & Town Panchayat, திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலகத்திலும் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.

பழங்குடியினர் நலத்துறை சார்பாக சிறப்பு முகாம்கள்-கலெக்டர் தகவல்

மேலும் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி திட்டஅலுவலர், பழங்குடியினர் நல திட்ட அலுவலகம், இரண்டாவது தளம், மாவட்ட  ஆட்சியர் அலுவலகம், திருவண்ணாமலை  மாவட்டம். பின்கோடு எண்: 606 604. தொடர்பு  கொள்ள வேண்டிய  தொலைபேசி எண். 9940375648 . 

இச்சிறப்பு முகாமை அனைவரும் பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு கலெக்டர் வந்தனா கார்க் தெரிவித்துள்ளார். 

Post a Comment

0 Comments