ஆதிதிராவிடர் பள்ளிகளில் காலியாக உள்ள 46 பணியிடங்களுக்கு ஆசிரியர்கள் நியமனம் குறித்து கலெக்டர் வந்தனா கார்க் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இது குறித்து மாவட்ட கலெக்டர் வந்தனா கார்க் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது,
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கி வரும் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் 23 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களும், நடுநிலை மற்றும் உயர்நிலைப்பள்ளிகளில் 23 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களும் காலியாக உள்ளன.
இது குறித்தவிவரம் மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலகத்தில் அறிவிப்புபலகையில் ஒட்டப்பட்டுள்ளது. இப்பணியிடங்கள் பள்ளிமேலாண்மைக்குழு வாயிலாக தொகுப்பூதிய முறையில் முற்றிலும் தற்காலிகமாக. நிபந்தனை அடிப்படையில் ஆசிரியர் தகுதித்தேர்வில் தாள்-2ல் (TNTET Paper -II) தேர்ச்சி பெற்றவர்கள் மட்டும் நிரப்பப்படவுள்ளது.
பட்டதாரி ஆசிரியருக்கு மாதம் ரூ.15 ஆயிரம் வழங்கப்படும். இடைநிலை ஆசிரியருக்கு மாதம் ரூ.12 ஆயிரம் வழங்கப்படும். பட்டதாரி, இடைநிலை ஆசிரியருக்கான பணியிடம் தற்போதைய நடைமுறையிலுள்ள அரசு விதிகளில் உள்ளவாறு பின்பற்றப்படும்.
நியமனம் செய்யப்படும் நாள் முதல் ஆசிரியர் தேர்வு வாரியத்தினால் பதவி உயர்வு வாயிலாக நிரப்பப்படும் வரை அல்லது இக்கல்வியாண்டில் பள்ளி இறுதி தேர்விற்கு (ஏப்ரல்-2027 முடிய) முந்தைய மாதம் வரை இவற்றில் எது முன்னரோ அதுவரை ஆசிரியர் பணிக்கு தகுதி பெற்ற பணிநாடுநர்களை பள்ளி மேலாண்மைக் குழு மூலம் தெரிவு செய்து தற்காலிகமாக நிரப்பிக் கொள்ள வேண்டும்.
இதற்காக விண்ணப்பிக்க விரும்புவோர் எழுத்து மூலம் விண்ணப்பத்தை உரிய சான்றாவணங்களுடன் நேரடியாகவோ அல்லது அஞ்சலிலோ திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 2-வது தளத்தில் உள்ள மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலகத்திற்கு 10.07.2026 ம் தேதி மாலை 5.45 மணிக்குள் சேருமாறு அனுப்ப வேண்டும்.
இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் வந்தனா கார்க் தெரிவித்துள்ளார்.

%20copy.webp)
0 Comments