திருவண்ணாமலையில் சட்ட விரோதமாக தத்து கொடுக்கப்பட்ட குழந்தை மீட்பு

திருவண்ணாமலையில் சட்ட விரோதமாக தத்து கொடுக்கப்பட்ட குழந்தை மீட்கப்பட்டுள்ளதாகவும், இக்குழந்தையை உரிமை கோருபவர்கள் 7 நாட்களுக்குள் அணுகுமாறும் கலெக்டர் தெரிவித்துள்ளார். 

திருவண்ணாமலையில் சட்ட விரோதமாக தத்து கொடுக்கப்பட்ட குழந்தை மீட்பு

இது குறித்து திருவண்ணாமலை கலெக்டர் வந்தனா கார்க் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, 

திருவண்ணாமலையில் சட்ட விரோதமாக தத்து கொடுக்கப்பட்ட குழந்தை மீட்பு

சித்ரா பவுர்ணமி திருவிழா நாளில் கார்த்திகேயன்-கவுசல்யா என்ற தம்பதியினர் தங்கள் குடும்ப பிரச்சனை காரணமாக தங்களது குழந்தை அண்ணாமலை என்பவரை அர்ச்சனா எனும் மூன்றாம் பாலினத்தவருக்கு சட்டத்திற்கு புறம்பாக தத்து கொடுத்துள்ளனர். 

இதன் விவரம் அறிந்த திருவண்ணாமலை மாவட்ட குழந்தைகள் உதவி அலகு பணியாளர்கள் சட்டவிரோதமாக தத்தெடுத்த குழந்தையை மீட்டு 02.06.2025 அன்று குழந்தைகள் நலக்குழுவில் ஒப்படைத்தனர். குழுவின் ஆணைப்படி அண்ணாமலை என்ற இக்குழந்தை திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசின் கீழ் பதிவுபெற்று இயங்கி வரும் சிறப்பு தத்துவள மையத்திடம் உள்நாட்டிலோ, வெளிநாட்டிலோ தத்து வழங்க ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

இக்குழந்தையை உரிமம் கோருபவர் எவரேனும் இருப்பின் உரிய ஆதாரங்களுடன் இவ்வறிவிப்பு வழங்கப்பட்ட 7 நாட்களுக்குள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள், திருவண்ணாமலை என்ற அலுவலகத்தினை அணுகலாம். 

திருவண்ணாமலையில் சட்ட விரோதமாக தத்து கொடுக்கப்பட்ட குழந்தை மீட்பு

குழந்தையின் பெயர்: அண்ணாமலை                

பிறந்த தேதி: 21.02.2023 

அலுவலக முகவரி: மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, வட்டாட்சியர் அலுவலக வளாகம்,  கிளைச்சிறை அருகில், திருவண்ணாமலை மாவட்டம் – 606 601. தொலைபேசி எண். 04175 – 223030, அலைபேசி எண். 6382614143, 6382614197.

இவ்வாறு கலெக்டர் வந்தனா கார்க் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments