ஓட்டல், டீ,பங்க் கடைகளில் ஆய்வு நடத்தப்படும்-கலெக்டர்

ஓட்டல்கள், சாலையோர ஓட்டல்கள், டீ,பங்க் கடைகளில் 3 மாத காலம் ஆய்வு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக கலெக்டர் வந்தனா கார்க் தெரிவித்துள்ளார். மேலும் 9 விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என எச்சரித்துள்ளார். 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, 

ஓட்டல், டீ,பங்க் கடைகளில் ஆய்வு நடத்தப்படும்-கலெக்டர்
செயற்கை நுண்ணறிவு படம் 

தமிழ்நாடு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை ஆணையர் உத்தரவின்படியும், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் வழிகாட்டுதலின்படியும் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து உணவு சேவை நிறுவனங்களிலும் சுகாதாரம் மற்றும் உணவு தரத்தை உறுதி செய்வதற்காக 01.09.2026 முதல் 30.11.2026 வரை மூன்று மாத காலத்திற்கு சிறப்பு ஆய்வு (Special Drive) நடைபெற உள்ளது.

இச்சிறப்பு ஆய்வின் கீழ் திருவண்ணாமலை மாவட்டத்தில் இயங்கும் உணவகங்கள் (Restaurants/Hotels) உணவுக்கூடங்கள், விடுதிகள், சிற்றுண்டிச் சாலைகள் (Canteens), சுபகாரிய சமையல் அமைப்பாளர்கள் (Caterers), தெருவோர உணவு வியாபாரிகள் (Hawkers), தேநீர் கடைகள் மற்றும் சிறிய ரக திண்பண்டக் கடைகள் உள்ளிட்ட அனைத்து உணவு வணிக நிறுவனங்களிலும் (Food Business Operators) தீவிர ஆய்வு மேற்கொள்ளப்படும். 

1.அனைத்து உணவு வணிகர்களும் செல்லுபடியாகும் FSSAI உரிமம் (License) அல்லது பதிவு சான்றிதழ் (Registration Certificate) பெற்றிருக்க வேண்டும். உரிமம் பெறாமல் இயங்கும் நிறுவனங்கள் மீது சட்டம் பிரிவு 63-ன் கீழ் கடும் நடவடிக்கை மற்றும் அபராதம் விதிக்கப்படும்.

2.உணவு வணிகர்களுக்கு உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சரிபார்ப்புப் பட்டியலை (Inspection Checklist) பதிவிறக்கம் செய்து, தங்களது நிறுவனங்களில் சுய தணிக்கை செய்து குறைபாடுகளை முன்கூட்டியே நிவர்த்தி செய்ய வேண்டும்.  உணவு பாதுகாப்பு அலுவலர்களின் ஆய்வின்போது இந்த சுய தணிக்கை அறிக்கை (Self Audit Report) வைத்திருக்க வேண்டும்.

3.சமையலறை, உணவு சேமிப்பு பகுதிகள், குளிர்சாதன பெட்டிகள் (Deep Freezers/Refrigerators) மற்றும் மேஜை, சுவர்கள் தூய்மையாகவும், எண்ணெய், பிசுக்கின்றியும் பராமரிக்கப்பட வேண்டும்.

4.பூச்சி மற்றும் எலி கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் (Pest Control) முறைப்படி மேற்கொள்ளப்பட்டு அதற்கான ஆவணங்கள் பராமரிக்கப்பட வேண்டும்.

5.உணவு கையாளுபவர்கள் அனைவரும் மருத்துவ தகுதி சான்றிதழ் (Medical Fitness Certificate) பெற்றிருக்க வேண்டும்.

ஓட்டல், டீ,பங்க் கடைகளில் ஆய்வு நடத்தப்படும்-கலெக்டர்
செயற்கை நுண்ணறிவு படம் 

6.FOSTAC (Food Safety Training and Certification) பயிற்சியில் பங்கேற்று சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

7.பணியாளர்கள் தலைக்கவசம் (Head Cover), கையுறை (Gloves), முகக்கவசம் (Face Mask) மற்றும் சுத்தமான ஏப்ரன் (Apron) அணிய வேண்டும்.

8.பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெயை மீண்டும் பயன்படுத்தக் கூடாது அதை FSSAI -ஆல் அங்கீகரிக்கப்பட்ட RUCO முகவர்களிடம் ஒப்படைத்து அதற்கான பதிவேடுகளை பராமரிக்க வேண்டும். செயற்கை நிறமிகள் மற்றும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்த கூடாது.  செய்தித்தாள் போன்ற மையிட்ட காகிதங்கள்  உணவுப்பொருட்கள் பொட்டலமிட பயன்படுத்த கூடாது.  

9.சமையறையில் தரமான மற்றும் துருபிடிக்காத கத்திகள் மற்றும் வெட்டுக் கருவிகளையே பயன்படுத்த வேண்டும்.

உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டு ஆய்வின்போது உணவு பாதுகாப்பு விதிகளை மீறும் நிறுவனங்கள் உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006-ன் கீழ் உடனடி மேம்பாட்டு அறிவிப்பு (Improvement Notice) வழங்கி அபராதம் விதிக்கப்படுவதுடன் சட்டப்பூர்வ வழக்கு தொடரப்பட்டு நிறுவனங்களின் உரிமம் ரத்து செய்யப்படும்.

உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006-ன் கீழ், மாவட்ட நியமன அலுவலர் மற்றும் உணவு பாதுகாப்பு அலுவலர்கள், மாநில உரிமம் பெற்ற நிறுவனங்கள் மட்டுமின்றி மத்திய FSSAI உரிமம் பெற்ற உணவு நிறுவனங்களிலும் ஆய்வு மேற்கொள்ள மத்திய மற்றும் மாநில அரசுகளால் முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளன.

இவ்வாறு கலெக்டர் வந்தனா கார்க் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments