2 பேரை பலி வாங்கிய கர்நாடகா பஸ் மீது கல்வீச்சு

2 பேரை பலி வாங்கிய கர்நாடகா பஸ் மீது கல்வீச்சு

செங்கம் அருகே 2 பேரை பலி வாங்கிய கர்நாடகா அரசு பஸ்சின் கண்ணாடிகளை பொதுமக்கள் கல்வீசி உடைத்தனர். 

2 பேரை பலி வாங்கிய கர்நாடகா பஸ் மீது கல்வீச்சு

செங்கம் அடுத்த பக்ரிபாளையம் காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் சிவா. இவர் திருவண்ணாமலை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை ஓரம் பஞ்சர் கடை நடத்தி வருகிறார். இவரது மகன் பிரசாந்த் (27).

நேற்று இரவு வேளாங்கண்ணியில் இருந்து பெங்களூரு நோக்கி சென்ற ஆம்னி பஸ் நள்ளிரவு 1.30 மணியளவில் செங்கம் அருகே வந்தபோது டயர் பஞ்சரானது. இதனால் ஆம்னி பஸ் டிரைவரான திருச்சியை சேர்ந்த அன்பு (50) என்பவர், பஞ்சர் ஒட்டுவதற்காக பிரசாந்தின் கடையின் முன் பஸ்சை நிறுத்தினார்.

சிவாவின் மகன் பிரசாத், பஞ்சர் ஒட்டுவதற்கு ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தார். அருகில் அன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது பெங்களூருவிலிருந்து- கடலூர் நோக்கி சென்று கொண்டிருந்த கர்நாடகா அரசு பஸ் திடீரென தறிகெட்டு ஓடி இருவர் மீதும் மோதியது. இதில் பிரசாந்த்தும், அன்பும் தூக்கியெறிப்பட்டு அதே இடத்தில் இறந்தனர். 

2 பேரை பலி வாங்கிய கர்நாடகா பஸ் மீது கல்வீச்சு

இதையடுத்து கர்நாடகா பஸ்சின் டிரைவரும், கண்டக்டரும் பஸ்சிலிருந்து குதித்து தப்பி ஓடி விட்டனர். 

விபத்தை கேள்விப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த உறவினர்கள் பிரசாந்த்தின் உடலை பார்த்து கதறி அழுதனர். அப்போது அங்கு திரண்ட கிராம மக்கள் விபத்தை ஏற்படுத்திய கர்நாடகா பஸ்சின் கண்ணாடிகளை கல்வீசி உடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 

2 பேரை பலி வாங்கிய கர்நாடகா பஸ் மீது கல்வீச்சு

2 பேரை பலி வாங்கிய கர்நாடகா பஸ் மீது கல்வீச்சு

தகவல் கிடைத்ததும் செங்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆம்னி மற்றும் கர்நாடகா பஸ்சில் வந்தவர்களை மாற்று வாகனம் மூலம் பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர். பிறகு விபத்தில் பலியான 2 பேரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய கர்நாடக அரசு பஸ் டிரைவரை தேடி வருகின்றனர். கர்நாடக அரசு பஸ் மோதி 2 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.