திருவண்ணாமலை: 13 பேருக்கு நல்லாசிரியர் விருது

திருவண்ணாமலை மாவட்டத்தில் 13 பேர் மாநில நல்லாசிரியர் விருது பெற உள்ளனர். 

ஆசிரியராக இருந்து குடியரசுத் தலைவராக உயர்ந்த சர்வப்பள்ளி ராதாகிருஷ்ணனைப் போற்றும் விதமாக ஆண்டுதோறும் நல்லாசிரியர் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. 

இந்த ஆண்டு 386 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பர் 5-ஆம் தேதி (நாளை) நல்லாசிரியர் விருதுகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்குவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

திருவண்ணாமலை மாவட்டத்தில் எந்தவித குற்றச்சாட்டுக்கும் ஆளாகாத, போலீசில் குற்றவியல் நடவடிக்கை இல்லாத 13 ஆசிரியர்கள் தமிழக அரசின் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 

அவர்களது பெயர் விவரம் வருமாறு:-

சுதாகர்

1) வா.சுதாகர், பட்டதாரி ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, ஆண்டியாப்பாளையம். 

சண்முகம்

2) நா.சண்முகம், இடைநிலை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, புன்னை, புதுப்பாளையம்.

நைனா

3) அ.நைனா. தலைமையாசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, மலையனூர் செக்கடி.

4) க.பாண்டுரங்கன், இடைநிலை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, கீழ்வணக்கம்பாடி.

5) எம்.ரவி, இடைநிலை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, சதக்குப்பம்.

விஜயகுமார்

6) ஜி.விஜயகுமார், பட்டதாரி ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, சு.நல்லூர்.

7) கி.சாந்தகுமார், தலைமையாசிரியர், அரசு உயர்நிலைப் பள்ளி, அடிஅண்ணாமலை.

ரகு

8) ரா.ரகு, பட்டதாரி ஆசிரியர் அரசு உயர்நிலைப் பள்ளி, முத்தனூர்.

சுமித்ரா தேவி

9) ந.சுமித்ரா தேவி, பட்டதாரி ஆசிரியர், அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, கீழ்பென்னாத்தூர்.

முபாரக்

10) எச்.முபாரக், பட்டதாரி ஆசிரியர், அரசு உயர்நிலைப் பள்ளி, திருவோத்தூர்.

11) டி.வெங்கடேசன், பட்டதாரி ஆசிரியர், அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, வேட்டவலம்.

சந்திரசேகரன்

12) கே.சந்திரசேகரன், இடைநிலை ஆசிரியர், அரசு மேல்நிலைப் பள்ளி, ராஜந்தாங்கல்.

13) ச.சரோஜினி, தலைமையாசிரியர் தூய நெஞ்சம் மெட்ரிக் உயர்நிலைப் பள்ளி, ஆவூர். 

-----------------------------------