ஆம்னி வேன்,லாரி மற்றும் தாசில்தார்கள் பயன்படுத்திய பொலிரோ வாகனங்கள் ஏலம் விடப்பட உள்ளதாக கலெக்டர் தர்ப்பகராஜ் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் பொது விநியோக திட்டத்தின் கீழ் வழங்கப்படும் அத்தியாவசியப் பொருட்கள் கள்ளத்தனமாக லாப நோக்கத்தில் கடத்திய போது கைப்பற்றப்பட்ட வாகனங்கள் ஏலம் விடப்பட உள்ளது.
ஏலம் விடப்படும் வாகனங்களின் விவரம்
இதே போல் வந்தவாசி வட்டாட்சியர் உட்பட 9 வட்டாட்சியர்கள் பயன்படுத்தி வந்த ஈப்புகள் (ஜீப்புகள்) முதிர்ந்த நிலையில் உள்ளதால் கழிவு செய்யும் பொருட்டு பொது ஏலம் விட குழு நியமனம் செய்யப்பட்டுள்ளது.
ஏலம் விடப்படும் வாகனங்களின் விவரம்
பொது ஏலத்தில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் தங்களின் ஆதார் அட்டை, பான் கார்டு, புகைப்படம்-2 மற்றும் பதிவு கட்டணம் ரூ.100/- கொண்டு வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பதிவு கட்டணம் திருப்பி அளிக்கப்பட மாட்டாது. வாகனங்களை ஏலம் எடுப்பவர்கள் ஏலம் முடிந்தவுடன் ஏலத்தொகை + GST 18% முழுவதையும் ரொக்கமாக செலுத்த வேண்டும்.
மேற்கண்ட ஏலங்கள் அனைத்தும் 9.9.2025-ம் தேதி காலை 11 மணிக்கு திருவண்ணாமலை ஆயுதப்படை மைதானத்தில் நடைபெறும்.
இத் தகவலை கலெக்டர் க.தர்ப்பகராஜ் தெரிவித்துள்ளார்.
Social Plugin