குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் ரூ.18 ஆயிரத்தில் வேலை-கலெக்டர் தகவல்

திருவண்ணாமலை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் சமூகப் பணியாளர் காலிப்பணியிடத்திற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக கலெக்டர் தெரிவித்துள்ளார். 

குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் ரூ.18 ஆயிரத்தில் வேலை-கலெக்டர் தகவல்

திருவண்ணாமலை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் திருவண்ணாமலை காவல் எல்லைக்குட்பட்ட Special Juvenile Police Unit -களுக்கு பணியாற்றிட ஏதுவாக சமூகப் பணியாளர் (Social Worker) பணியிடத்தை ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளதால், அதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பதவி மற்றும் மாத ஊதியம் - சமூகப் பணியாளர் 

மாத ஊதியம் - ரூ.18,536 (தொகுப்பூதியம்)

பணியிடங்களின் எண்ணிக்கை  - 1.

கல்வி தகுதி, அனுபவம் மற்றும் வயது வரம்பு

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் சமூகப் பணி/சமூகவியல்/சமூக அறிவியல் துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றிருப்பது விரும்பத்தக்கது. பணி அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். கணினித் திறன் அவசியம். 

குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் ரூ.18 ஆயிரத்தில் வேலை-கலெக்டர் தகவல்

வயது வரம்பு- 42 ஆண்டுகள்.

முகவரி : மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு.

வட்டாட்சியார் அலுவலக வளாகம், பெரியார் சிலை அருகில்,  திருவண்ணாமலை-606601

தொலைபேசி எண்: 04175-223030.-அலைபேசி எண்: 6382614143, 6382614197

மேற்குறிய பணியிடத்திற்கு உரிய தகுதியினை பெற்றிருப்பவர்கள் மட்டும் இப்பதவிக்கு விண்ணப்பித்தல் வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் கல்வி சான்றிதழ் மற்றும் அனைத்து சான்றிதழ்களின் நகல்களுடன் 10.07.2026 அன்று மாலை 5.45 மணிக்குள் மேற்குறிப்பிட்ட அலுவலக முகவரிக்கு வந்து சேர வேண்டும். 
குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் ரூ.18 ஆயிரத்தில் வேலை-கலெக்டர் தகவல் 

விண்ணப்பங்களை https://tiruvannamalai.nic.in என்ற இணையதளத்தின் வாயிலாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இத்தகவலை திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் வந்தனா கார்க் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments