திருவண்ணாமலையில் ஹேப்பி பர்த்டே பேனரை கட்டிய போது 2 பேர் மின்சாரம் தாக்கி பலியானார்கள்.
திருவண்ணாமலை நகரம் அண்ணாநகர் 5வது தெருவை சேர்ந்தவர் ராஜா. இவரது மகன் லோகேஷ்(15). திருவண்ணாமலை நகரம் திருநகர் பகுதியை சேர்ந்தவர் ராமலிங்கம். இவரது மகன் தனுஷ்குமார்(18). தனுஷ்குமார் சமீபத்தில் நடந்த பிளஸ்-2 தேர்வை எழுதியுள்ளார்.
இவர்களும், அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் கண்ணனும் நண்பர்கள். இன்று கண்ணனின் பிறந்த நாளுக்காக நேற்று இரவு சுமார் 11:30 மணியளவில் திருவண்ணாமலை மணலூர்பேட்டை சாலையில் வாழ்த்து பேனரை லோகேஷ் மற்றும் தனுஷ்குமார் உள்ளிட்ட நண்பர்கள் கட்டியுள்ளனர். அப்போது பேனரின் மேல்பக்கத்தில் கயிறு கட்டுவதற்கு லோகேஷ் மற்றும் தனுஷ்குமார் இருவரும் டிரான்ஸ்பார்மர் மீது ஏறினர்.
அப்போது எதிர்பாராத விதமாக 2 பேர் இருவர் மீதும் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பலியானார்கள். தகவல் கிடைத்ததும் திருவண்ணாமலை நகர போலீசார் பிணங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நண்பனின் பிறந்த நாளுக்கு வாழ்த்து பேனர் கட்டும் போது 2 பேர் மின்சாரம் பாய்ந்தது இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Social Plugin