கிறிஸ்துவ நல வாரியத்தில் அலுவலர் சாரா உறுப்பினர் சேர்ப்பு

கிறிஸ்துவ நல வாரியத்தில் அலுவலர் சாரா உறுப்பினர் சேர்ப்பு

கலெக்டர் பாஸ்கர பாண்டியன் அறிவிப்பு 

கிறித்துவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள்  மற்றும்  பணியாளர்கள் நல  வாரியத்தில் அலுவலர் சாரா உறுப்பினர்களை நியமன செய்ய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக கலெக்டர் பாஸ்கர பாண்டியன் அறிவித்துள்ளார். 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, 

திருவண்ணாமலை  மாவட்டத்தில் கிறித்துவ  தேவாலயங்களில்  பணிபுரியும் உபதேசியார்கள் மற்றும்  பணியாளர்களின்  சமூக பொருளாதார மற்றும் கல்வி மேம்பாட்டிற்கான  கிறித்துவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியம் அமைக்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட  நல  வாரியத்தில்  அலுவலர் சாரா உறுப்பினர்களை நியமன செய்ய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.   விண்ணப்பிக்க விரும்புவோர், கிறித்துவ மதத்தை சேர்ந்த சமூக சேவையில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர் மற்றும் சமுதாய முன்னேற்றத்தில் அக்கறை உடையவர்களாக இருக்க வேண்டும்.

கிறிஸ்துவ நல வாரியத்தில் அலுவலர் சாரா உறுப்பினர் சேர்ப்பு

எனவே, கிறித்துவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் அலுவலர் சாரா உறுப்பினராக விருப்பமுள்ளவர்கள் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகத்தை தொடர்பு கொண்டு உரிய படிவம் பெற்று தங்களது சுய விவரக் குறிப்புகளுடன் இரட்டை பிரதிகளில்  மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். 

திருவண்ணாமலை மாவட்ட கிறித்துவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்களின் நலவாரியம் மூலம் தகுதியான விண்ணப்பங்கள் அரசின் பரிந்துரைக்கு அனுப்பப்படும் 

இவ்வாறு கலெக்டர் தெ.பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.