138 பேருக்கு எஸ்.டி சான்று- மனு கொடுத்த உடன் தீர்வு
உங்களைத் தேடி, உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் மனு கொடுக்கப்பட்ட உடன் 138 பேருக்கு எஸ்.டி சான்றுகளை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வழங்கினார்.
தமிழ்நாடு முதலமைச்சரின் உங்களைத் தேடி, உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ், போளுர் ஊராட்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன் ஆய்வுகள் மேற்கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
போளூர் இஸ்மாயில் தெருவில் வீடு வீடாக சென்று பொதுமக்கள் மக்கும், மக்கா குப்பைகளை பிரித்து வழங்கி, சேகரிக்கும் பணியையும், வீட்டில் மாடி தோட்டம் அமைக்கப்பட்டுள்ளதையும் அவர் பார்வையிட்டார். பிறகு உழவர் சந்தையை பார்வையிட்டு பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடம் காய்கறிகளின் தரத்தை கேட்டறிந்தார். மேலும் விவசாயிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேளாண்துறை அலுவலர்களுக்கு பரிந்துரை செய்து அங்கு வைக்கப்பட்டுள்ள குளிர்சாதன பெட்டியை பார்வையிட்டார்.
இதனை தொடர்ந்து, கரைப்பூண்டி ஊராட்சி சாணாரப்பாளையம் ஊராட்சி தொடக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தினை ஆய்வு செய்து, மாணவர்களுக்கு உணவு பரிமாறி , அவர்களுடன் அமர்ந்து உணவு அருந்தினார். அருகில் உள்ள அங்கன்வாடி மையத்தை ஆய்வு செய்து, சமையலறை, உணவு வழங்குதல் மற்றும் குழந்தைகளின் கற்றல் திறனை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் ஆய்வு செய்தார்.
கொமனந்தல் கிராமத்தில் மளிகை கடை, பேக்கரி, இறைச்சி கடைகளில் பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து, மஞ்சப்பையினை வழங்கினார், மேலும் போளுர் வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விவசாயிகளுக்கு அடிப்படை தேவைகளை விரைந்து வழங்கிட வேளாண்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
![]() |
சீருடை, பாடபுத்தகங்கள் வழங்கல் |
![]() |
இருளர் காலனியில் மருத்துவ முகாம் |
இதனை தொடர்ந்து, கஸ்தம்பாடி ஊராட்சி இருளர் காலணி குடியிருப்பில் நேற்றைய முகாமில் கோரிக்கைகள் மனுக்களை பரிசீலித்து; உடனடி தீர்வாக 138 பயனாளிகளுக்கு பழங்குடியின ஜாதி சான்றிதழ்களும், 8 நபர்களுக்கு ஆதார் அடையாள அட்டை, 1 பயனாளிக்கு வீட்டுமனை பட்டா நகல், 2 பயனாளிகளுக்கு முதியோர் ஓய்வு ஊதிய திட்டத்திற்கான ஆணை, பள்ளியில் இடைநின்ற 15மாணவ மாணவியர்;களுக்கு மீண்டும் சேர்த்தல், மகாத்மா காந்தியின் தேசிய ஊரக வேலை வாய்ப்பிற்கான அட்டை 2 பயனாளிகளுக்கும், முதலமைச்சரின் விரிவான காப்பீடு அட்டை 1 பயனாளிக்கும், 24 பயனாளிகளுக்கு பழங்குடியின நலவாரிய அட்டையும் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வழங்கினார்.
இந்த ஆய்வின் போது, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) செ.ஆ.ரிஷப், மாவட்ட வருவாய் அலுவலர் மு.பிரியதர்ஷினி, கோட்டாட்சியர் தனலட்சுமி, பழங்குடியினர் நல அலுவலர் செந்தில்குமார் மற்றும் அலுவலர்கள் சென்றிருந்தனர்.
Social Plugin