அரசு கலைக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்

திருவண்ணாமலை உள்பட 3 அரசு கலைக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு வரும் 27ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என க.தர்ப்பகராஜ் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது

திருவண்ணாமலை மாவட்டத்தில், திருவண்ணாமலை கலைஞர் கருணாநிதி அரசு கலைக் கல்லூரியில் 2230 மாணவர்கள், செய்யாறு அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 1830 மாணவர்கள், வந்தவாசி தென்னாங்கூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 750 மாணவர்கள் நடப்பு கல்வி ஆண்டில் சேர்க்கப்பட உள்ளனர்.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர்களுக்குக் கல்விக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அரசு, அரசு உதவிபெறும் கல்லூரி மாணவ- மாணவிகளுக்கு புதுமைப்பெண் மற்றும் தமிழ்ப்புதல்வன் திட்டங்கள் மூலம் மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படுகிறது. மேலும், நான் முதல்வன் திட்டம் மூலம், வேலைவாய்ப்பு பயிற்சிகள் நடத்தப்படுகிறது.

அரசு கலைக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்

மேலும், அரசு வழங்கும் கல்வி உதவித் தொகை மற்றும் இலவச பேருந்து வசதி உள்ளன. திறமை வாய்ந்த ஆசிரியர்களால் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அரசு கல்லூரிகளில் கட்டமைப்பு வசதிகளும் சிறப்பாக உள்ளன.

தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2025-26 ஆம் கல்வி ஆண்டிற்கான இளநிலைப் பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க விரும்புவோர் www.tngasa.in என்ற இணையதள முகவரியில் 27.05.2025 வரை பதிவுசெய்யலாம். 

இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க இயலாத மாணவர்கள், அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள சேர்க்கை உதவி மையங்கள் (Admission Facilitation Centre AFC ) மூலம் விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

விண்ணப்பக்கட்டண விவரம்

விண்ணப்பக் கட்டணம் மற்றும் பதிவுக் கட்டணத்தை Debit Card /Credit Card/ Net Banking/ UPI வாயிலாகச் செலுத்தலாம். 

மாணவர்கள் சேர்க்கை தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கம் பெற கல்லூரிக் கல்வி இயக்ககத்தில் செயல்படும் உதவி மையத்தைத் திங்கள் முதல் வெள்ளிக்கிழமைகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை 044 . 24343106 / 24342911 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.


அரசு கலைக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்
க.தர்ப்பகராஜ் 

விண்ணப்பக் கட்டணம் ஒரு மாணவருக்கு ரூ.48 மற்றும் பதிவுக் கட்டணம் ரூ.2 செலுத்த வேண்டும். எஸ்சி எஸ்டி பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை. பதிவுக் கட்டணம் ரூ.2 மட்டும் செலுத்த வேண்டும்.  

இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

-----------------------------------------

SUBSCRIBE TO TIRUVANNAMALAI AGNIMURASU 


Post a Comment

0 Comments