திருவண்ணாமலையில் பள்ளி மாணவர் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருவண்ணாமலை சாரோன் பகுதியைச் சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மகன் சுனில் (வயது 16) 11-ஆம் வகுப்பு படித்து வந்தார்.
இன்று இரவு சுனிலும், அவரது நண்பர்களும் அண்ணாநகரில் இருந்த போது ஏற்பட்ட தகராறில் கோட்டை முத்து (24) என்பவர் கத்தியால் சுனிலின் நெஞ்சில் குத்தியதாக சொல்லப்படுகிறது.
இதில் படுகாயம் அடைந்த சுனில் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பரிதாபமாக இறந்தார்.
கோட்டை முத்து, ராமநாதபுரம் மாவட்டம் பாப்பனம் பகுதியைச் சேர்ந்தவர். இவர் இன்ஸ்டாகிராம் மூலம் ஏற்பட்ட பழக்கத்தால் பெண்ணை தேடி திருவண்ணாமலை வந்ததாகவும், அப்போது அவருக்கும், பெண்ணின் தம்பி மற்றும் நண்பர்களுக்கும் ஏற்பட்ட வாக்குவாதம் கொலையில் முடிந்ததாகவும் கூறப்படுகிறது.
விசாரணை முடிவில் கொலைக்கான முழு காரணமும் தெரிய வரும் என போலீசார் தெரிவித்தனர். இது சம்பந்தமாக திருவண்ணாமலை நகர போலீசார் வழக்கு பதிவு செய்து கோட்டை முத்துவை கைது செய்தனர்.
மாணவர் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் திருவண்ணாமலையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
0 Comments