மருத்துவ படிப்புக்கு வேட்டவலம் பள்ளி மாணவி தேர்வு

திருவண்ணாமலை அடுத்த வேட்டவலம் பள்ளியில் படித்த மாணவி பல் மருத்துவ படிப்புக்கு தேர்வானார். 

மருத்துவ படிப்புக்கு வேட்டவலம் பள்ளி மாணவி தேர்வு

திருவண்ணாமலை அடுத்த ஜமீன்அகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கர். இவரது மகள் சிவரஞ்சனி. அங்குள்ள ஊராட்சி‌‌ ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையும், பின்னர் 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை அருகிலுள்ள வேட்டவலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்தார். 

இந்நிலையில் தமிழக அரசின் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் சிவரஞ்சனி பல் மருத்துவம் படிப்பதற்கான தேர்வாகி உள்ளார். 

இதையொட்டி ஜமீன்அகரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் பள்ளி தலைமையாசிரியர் சி.அ.முருகன் சிவரஞ்சனிக்கு சால்வை அணிவித்து நினைப்பரிசை வழங்கியும் பாராட்டி பேசினார். 

ஆசிரியர்கள் கௌரி, சுடர்விழி,கலைச்செல்வி, அருண்குமார்,மார்கிரேட்மேரி ஆகியோரும் சிவரஞ்சனியை பாராட்டி வாழ்த்தினர்.

Post a Comment

0 Comments