கலசபாக்கம் அடுத்த பெரிய கிளாம்பாடி ஊராட்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திருவேங்கடத்தின் 91வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது திருவுருவப்படத்திற்கு பெ.சு.தி.சரவணன் எம்எல்ஏ மாலை அணிவித்து அன்னதானம் வழங்கினார்.
திருவண்ணாமலை அடுத்த கலசபாக்கம் அடுத்த பெரிய கிளாம்பாடியைச் சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பெ.சு.திருவேங்கடம் திமுகவில் சொத்து பாதுகாப்பு குழு செயலாளராகவும், தலைமை செயற்குழு உறுப்பினராகவும் பணியாற்றியவர். நான்கு முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். 2022-ஆம் ஆண்டு வயது முதிர்வு காரணமாக இறந்தார்.
இன்று அவரது 91-வது பிறந்த நாளாகும். இதையொட்டி மல்லவாடி மறுவாழ்வு இல்லத்தில் உள்ளவர்களுக்கு புத்தாடை மற்றும் உணவுகளை அவரது மகனும், கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினருமான பெ.சு.தி.சரவணன் எம்எல்ஏ வழங்கினார்.
முன்னதாக பெ.சு.திருவேங்கடத்தின் திருவுருவப்படத்திற்கும், நினைவு இடத்திலும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
நிகழ்ச்சியில் வழக்கறிஞர் பெ.சு.தி.சக்தி, துரிஞ்சாபுரம் ஒன்றிய செயலாளர்கள் பா.ராமஜெயம், கலசபாக்கம் ஒன்றிய செயலாளர்கள் அ.சிவகுமார், வழக்கறிஞர் க.சுப்பிரமணியம் மற்றும் கழக நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
0 Comments