பவுர்ணமி கிரிவலத்தின் போது சந்திரகிரகணம் வருவதால் அந்த நேரத்தில் கிரிவலம் செல்லலாமா? என்பது குறித்து அண்ணாமலையார் கோயில் தலைமை சிவாச்சாரியார் விளக்கம் அளித்துள்ளார்.
திருவண்ணாமலையில் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி அன்று லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து கிரிவலம் செல்கின்றனர்.
இந்த மாதம் விசுவாவசு ஆண்டு ஆவணி மாதம் பவுர்ணமி தினத்தன்று 14 கிலோ மீட்டர் தூரம் கொண்ட அண்ணாமலையை வலம் வர உகந்த நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வரும் 7-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 1.49 மணிக்கு தொடங்கி நள்ளிரவு 12.32 மணிவரை பவுர்ணமி திதி என்பதால் அந்த நேரத்தில் பக்தர்கள் கிரிவலம் வரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
![]() |
பி.டி.ரமேஷ் |
இந்நிலையில் அன்றை தினம் இரவு சந்திர கிரகணமும் வருகிறது. அந்த நேரத்தில் பக்தர்கள் கிரிவலம் செல்லலாமா? என அண்ணாமலையார் கோயில் தலைமை சிவாச்சாரியார் பி.டி.ரமேஷிடம் கேட்டதற்கு அவர் அளித்த விளக்கம்,
7-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு 9.57-க்கு சந்திர கிரகணம் ஆரம்பித்து நடு இரவு 1.26-க்கு முடிவடைகிறது. மொத்த கிரகண நேரம் 3 மணி 29 நிமிடங்கள் ஆகும். இந்தியா முழுவதும் இந்த சந்திரகிரகணம் தெரியும்.
அவிட்டம், சதயம், பூரட்டாதி, திருவாதிரை, ஸ்வாதி நட்சத்திரக்காரர்கள் சாந்தி செய்து கொள்ள வேண்டும். கிரகணம் ஆரம்பிக்கும் போதும், விட்ட போதும் விமோசன ஸ்தானம் செய்ய வேண்டும். தர்பணம் செய்பவர்கள் இரவு 11.45-க்கு செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
------------------------------------
0 Comments