அண்ணாமலையார் கோயில் முன்பு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்

அண்ணாமலையார் கோயில் முன்பு பக்தர்களின் வசதிக்காக நவீன சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் அமைக்க இடத்தை ஒதுக்கித் தருமாறு கலெக்டர் தர்ப்பகராஜ் உத்தரவிட்டார். 

அண்ணாமலையார் கோயில் முன்பு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்

திருவண்ணாமலை மாடவீதிகளான தேரடித் தெரு, திருவூடல் தெரு ஆகியவற்றில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரூ.15 கோடி மதிப்பீட்டில் 1.7 கிலோ மீட்டர் தொலைவிற்கு கான்கிரீட் சாலை அமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. 

இப்பணிகள் பணிகள் நடைபெற்று வருவதை கலெக்டர் தர்ப்பகராஜ் இன்று இரவு சென்று பார்வையிட்டார். தேர்கள் இருந்த இடங்களிலும், 16 கால் மண்டபம் முன்பும் சிமெண்ட் சாலைகள் போடப்படுவதை பார்வையிட்டார். 

பெரும்பாலான பணிகள் முடிவுற்று இருப்பதை ஆய்வு செய்த கலெக்டர் மீதமுள்ள பணிகளை குறிப்பிட்ட காலத்திற்குள் விரைந்து முடிக்க வேண்டுமென துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார். 

16 கால் மண்டபம் முன்பு நவீன சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையத்தை அமைக்க இடம் தேவை என நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் கலெக்டரிடம் தெரிவித்தனர். இதையடுத்து சக்கரை குளத்திற்கு முன்பு உள்ள இடத்தை ஒதுக்கித் தருமாறு அண்ணாமலையார் கோயில் நிர்வாகத்திற்கு கலெக்டர் தர்ப்பகராஜ் உத்தரவிட்டார். 

இந்த ஆய்வின்போது திருவண்ணாமலை மாநகராட்சி ஆணையாளர் எஸ்.செல்வபாலாஜி, நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் அன்பரசு மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.

--------------------------------


Post a Comment

0 Comments