37-வது ஆண்டில் திருவண்ணாமலை மாவட்டம்

திருவண்ணாமலை மாவட்டமாக பிரிக்கப்பட்டு இன்றோடு 36 வருடம் முடிவடைந்துள்ளது. இதுவரை 24 கலெக்டர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.  

17-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் முகலாயர் தென்னிந்தியாவில் தங்கள் ஆட்சியை இழந்த போது ஆற்காடு பகுதிகளை உள்ளூர் ஆற்காடு நவாப்புகள் ஆட்சி புரிய தொடங்கினர் இப்பகுதிகளை 1801 ஆம் ஆண்டு பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனி கையகப்படுத்தியது. இவர்கள் தங்களது நிர்வாக வசதிகளுக்காக வட ஆற்காடு, தென் ஆற்காடு என இரு மாவட்டங்களாக பிரித்தனர். 

இதில் வட ஆற்காடு 1901 - ஆம் ஆண்டு சித்தூரை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வந்தது. இதில் வேலூர், ஆரணி, ஆற்காடு, செய்யாறு, போளூர், வந்தவாசி, குடியாத்தம், வாலாஜா ஆகிய வட்டங்கள் இருந்தன. திருவண்ணாமலை தென் ஆற்காடு மாவட்டத்தில் அமைந்திருந்தது. 

1911-ஆம் ஆண்டு வட ஆற்காட்டில் இருந்து சித்தூர் மாவட்டம் பிரிக்கப்பட்டது. இதையடுத்து வேலூரை தலைமை இடமாகக் கொண்டு வட ஆற்காடு மாவட்டம் செயல்பட்டு வந்தது. அப்போது திருவண்ணாமலை வட ஆற்காடு மாவட்டத்தோடு சேர்க்கப்பட்டது. 1989-ஆம் ஆண்டு செப்டம்பர் 30-ஆம் தேதி வட ஆற்காடு மாவட்டம் பிரிக்கப்பட்டு திருவண்ணாமலையை தலைமை இடமாகக் கொண்டு திருவண்ணாமலை சம்புவராயர் மாவட்டம் உருவானது. அதன்பிறகு திருவண்ணாமலை மாவட்டமானது. 

திருவண்ணாமலை மாவட்டம் உதயமாகி இன்றோடு 36 வருடம் நிறைவடைகிறது. 

திருவண்ணாமலை மாவட்டத்தின் மொத்த பரப்பு 6188 சதுர கிலோ மீட்டராகும். பரப்பளவில் இம்மாவட்டம் தமிழ்நாட்டில் 4-வது இடத்தில் உள்ளது. தொழிற்சாலைகள் குறைந்த இம்மாவட்டம் அரிசி உற்பத்தியில் முன்னணியில் உள்ளது. திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில், படைவீடு ரேணுகாம்பாள் திருக்கோயில், தென்னாங்கூர் பாண்டுரங்கன் திருக்கோயில், தேவிகாபுரம் பெரியநாயகி திருக்கோயில், சாத்தனூர் அணை, பர்வதமலை, ஜவ்வாதுமலை, மாமண்டூர் குடைவரைக் கோயில்கள், திருமலை ஜெயின் கோயில் ஆகியவை இம்மாவட்டத்திற்கு பெருமை சேர்க்கின்றன. 

கலெக்டர் பதவி வகித்தவர்கள் 



முதல் கலெக்டர்-  கோலப்பன்- 30.09.1989- 23.07.1991

2. சி.எஸ்.ராஜமோகன்- 24.07.1991- 01.09.1992

3. கே.தீனபந்து- 02.09.1992- 07.09.1993

4. ரமேஷ்குமார் கன்னா- 08.09.1993- 26.07.1995

5. கே.கணேசன்- 27.07.1995- 30.05.1996

6. எம்.அப்துல்லா ஷா- 30.05.1996- 04.05.1997

7. டாக்டர் சிவசூரியன்- 05.05.1997- 28.04.1998

8. கண்ணிகி பாக்கியநாதன்- 28.04.1998- 09.05.1999

9. தங்க கலியபெருமாள்- 10.05.1999- 10.06.2001

10. தீரஜ்குமார்- 11.06.2001- 05.06.2004

11. சத்யபிரதா சாஹூ- 06.06.2004- 03.06.2008

12. டாக்டர் மு.ராஜேந்திரன்-03.06.2008- 06.06.2011

13. அன்சுல் மிஸ்ரா-06.06.2011- 27.05.2012

14. டாக்டர் விஜய் பிங்ளே-30.05.2012- 30.06.2013

15. அ.ஞானசேகரன்- 07.07.2013- 30.04.2016

16. பூஜா குல்கர்னி- 01.05.2016- 24.05.2016

17. அ.ஞானசேகரன்- 25.05.2016- 28.07.2016

18. சா.பழனி(பொறுப்பு)- 29.07.2016- 10.09.2016

19. பிரசாந்த் எம்.வடநேரே- 11.09.2016- 30.08.2017

20. க.சு.கந்தசாமி- 31.08.2017- 14.11.2020

21. சந்தீப் நந்தூரி- 15.11.2020- 15.06.2021

22. முருகேஷ்- 16.06.2021- 29-01-2024

23. தெ.பாஸ்கரபாண்டியன்- 29-01-2024- 03-02-2025

24. க.தர்ப்பகராஜ்- 03-02-2025- இன்று வரை

1801-ஆம் ஆண்டு கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியின் போது இருந்த கலெக்டர்கள்

பார்க்க..

https://www.facebook.com/share/v/17PiwYSwvp/


Post a Comment

0 Comments