அரசு குற்றவியல் வக்கீல்கள் நியமனம் குறித்து கலெக்டர் தகவல்

அரசு குற்றவியல் வக்கீல்கள் நியமனம் குறித்து கலெக்டர் தகவல்

திருவண்ணாமலை மாவட்டத்தில் 27 அரசு குற்றவியல் வழக்கறிஞர்கள் காலிப்பணிடங்களை காலமுறை அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பை கலெக்டர் வந்தனா கார்க் வெளியிட்டுள்ளார். 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, 

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து மாவட்ட நீதிமன்றங்கள் மற்றும் சார்நிலை நீதிமன்றங்களில், அரசு குற்றவியல் வழக்குரைஞர்கள் (Public Prosecutor), கூடுதல் அரசு குற்றவியல் வழக்குரைஞர்கள் (Additional Public Prosecutor),  அரசு வழக்குரைஞர்கள் (Government Pleader) கூடுதல் அரசு வழக்குரைஞர்கள் (Additional Government Pleader) மற்றும் அரசு உரிமையியல் வழக்குரைஞர்கள் (Pleader doing Government Work) ஆகியோர்களின் பணிக்காலம் 30.06.2026 அன்றுடன் முடிவடையவுள்ள நிலையில், மேற்படி 27 காலிப்பணிடங்களை காலமுறை அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிக்கை தமிழ்நாடு அரசின் உத்தரவின்படி 05.06.2026 அன்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரால் வெளியிடப்பட்டுள்ளது.

எனவே, தமிழ்நாட்டில் உள்ள நீதிமன்றங்களில் குறைந்தது ஏழு ஆண்டுகள் அல்லது பத்து ஆண்டுகள் வழக்கறிஞராக பணி அனுபவம் பெற்றுள்ள வரும் சட்ட அலுவலர்களாக (Law Officers) நியமனம் பெற விருப்பமுள்ள வழக்கறிஞர்கள், மேற்படி அறிவிக்கையின், இணைப்பு I மற்றும் II –இல் உள்ள விண்ணணப்பப் படிவத்தில் விவரங்களைப் பூர்த்தி செய்து, தங்களது விண்ணப்பத்தினை இரண்டு கடவுச்சீட்டு அளவு புகைப்படங்களுடன் இணைத்து 29.06.2026 அன்று மாலை 05.45 மணிக்குள்ளாகவோ அல்லது அதற்கு முன்னரோ இவ்வலுவலகத்திற்கு அனுப்பி வைக்குமாறு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் கேட்டுக்கொள்ளப்படுகிறது. 

மேலும் 29.06.2026 அன்று மாலை 05.45 மணிக்கு மேல் பெறப்படும் விண்ணப்பங்கள் கட்டாயம் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என்ற விவரமும் தெரிவிக்கப்படுகிறது. விண்ணப்ப படிவங்களின் மாதிரி/பிரதி www.tiruvannamalai.nic.in  என்ற திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வலைத்தளம் மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளுமாறு கலெக்டர் வந்தனா கார்க் கேட்டுக்கொண்டுள்ளார்.

அரசு குற்றவியல் வக்கீல்கள் நியமனம் குறித்து கலெக்டர் தகவல்

வன்கொடுமைகள் தடுப்பு சிறப்பு  நீதிமன்றங்கள் 

பட்டியலின மற்றும் பட்டியல் பழங்குடியினர் (வன்கொடுமைகள் தடுப்பு) சட்டம். 1989-இன் (மத்தியச் சட்டம் 33/1989) கீழ் வரும் வழக்குகளை விசாரிப்பதற்கான சிறப்பு  நீதிமன்றங்கள் மற்றும் பிரத்யேக சிறப்பு நீதிமன்றங்களில். வழக்குகளை நடத்துவதற்குச் சிறப்புமிக்க மூத்த வழக்கறிஞர்களை (Eminent Senior Advocates) நியமிக்கும் பொருட்டு, தமிழ்நாடு அரசால் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு நீதிமன்றங்களில் குறைந்தது ஏழு ஆண்டுகள் வழக்கறிஞராக பணி அனுபவம் பெற்றுள்ளவரும், குற்றவியல் வழக்குகளை குறிப்பாக, பட்டியலின மற்றும் பட்டியல் பழங்குடியினர் (வன்கொடுமைகள் தடுப்பு) சட்டம் 1989 (மத்திய சட்டம் 33/1989)-இன் கீழ் வரும் வழக்குகளை நடத்துவதில் போதுமான அனுபவம் பெற்றுள்ளவரும், இப்பதவியை ஏற்க விருப்பமுள்ள வழக்கறிஞர்கள், சிறப்புமிக்க மூத்த வழக்கறிஞர்களாக (Eminent Senior Advocates)  நியமனம் செய்வதற்கான அறிவிக்கை தமிழ்நாடு அரசின் உத்தரவின்படி திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரால் 05.06.2026 அன்று வெளியிடப்பட்டுள்ளது.  

மேற்படி அறிவிக்கையின், இணைப்பு I மற்றும் II-இல் உள்ள விண்ணப்பப்படிவத்தில் விவரங்களைப் பூர்த்தி செய்து, தங்களது விண்ணப்பத்தினை இரண்டு கடவுச்சீட்டு அளவு புகைப்படங்களுடன் இணைத்து 24.06.2026 அன்று மாலை 06.00 மணிக்குள்ளாகவோ அல்லது அதற்கு முன்னரோ இவ்வலுவலகத்திற்கு அனுப்பி வைக்குமாறு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.  

மேலும் 29.06.2026 அன்று மாலை 06.00 மணிக்கு மேல் பெறப்படும் விண்ணப்பங்கள் கட்டாயம் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என்ற விவரமும் தெரிவிக்கப்படுகிறது. 

விண்ணப்பப் படிவங்களின் மாதிரி/பிரதி www.tiruvannamalai.nic.in என்ற திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வலைத்தளம் மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளமாறு கலெக்டர் வந்தனா கார்க் தெரிவித்துள்ளார்.  

Post a Comment

0 Comments